பக்கம்:முதலுதவி.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்வேன். சரி,இப்பொழுது நான் கேட்கும் கேள்விக்குட் பதில் சொல். முதல் உதவி என்ருல் என்ன ? / மணி : மக்களுக்கு ஆபத் து வருவது இயற்கை; அவ் ஆபத்து இன்னுருக்குத்தான் வரும் என்பதில்லே. யாருக்கும் வரும். அது எவ்வேளையிலும் வரும். அது எவ்வுருவத்திலும் வரும். ஒருவனுக்கு ஆபத்து ஒன்று ஏற்பட்டால் உ ட ேன வைத்தியருக்கு ஆள் அனுப்ப வேண்டும். அவர் வரும் வரை யிலும் அவ்வுயிரைப் பாதுகாக்க வேண்டும். அவ்வாறு அவ்வுயிரைப் பாது காத்தற் பொருட்டு முதன் முதலாகச் செய்யும் உதவியே முதல் உதவியாம். சங்கரன் ; நீ நல்ல பையன். ஒரு முறை கேட்ட உட னேயே மிக மிக அழகாகக் கேட்ட செய்தியைக் கூறு கிருயே. இது போலவே உனது பள்ளிப் பாடத்தையும் ஒழுங்காய் நீ படிக்கவேண்டும். என்ன, தெரியுதா ? இருவரும் விடு அடைந்தனர். அன்று இரவு செய்ய வேண்டியதை இருவரும் ஒழுங்காகச் செய்தனர். மறு நாளாயிற்று. இருவரும் பள்ளி சென்று வந்தனர். மாலைப் பொழுதும் வந்தது. மணி மகிழ்ச்சியுடன் சங்கரனிடம் வந்தான். சங்கரனும் மிக உற்சாகமாக அன்று காணப் பட்டான். இருவரும் கடந்த நாள் நிகழ்ச்சியைப் பற்றிப் பேசலாயினர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முதலுதவி.pdf/17&oldid=872705" இலிருந்து மீள்விக்கப்பட்டது