பக்கம்:முதலுதவி.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

+, - - - - - - - + படி சாக்குத் துண்டையே பெரும்பாலும் முதல் வாசலின் முன் பக்கம் விரித்து வைத்து இருப்பார்கள். குழந்தையில் முத்திரம் விட்டில் பெருகித் தி நாற்றம் கொடுக்காது இருக்கக் குழந்தைகளின் தொட்டிலின் கீழ்ச் சாக்குத் துண் டையே பரப்பி வைத்து இருப்பர். ஆகவே சாக்குத் துண்டு சாதாரணமாய் எல்லார் உடைய வீட்டிலும் இருக் கும் ஒரு பொருள் ஆகும். மணி : என்ன, அண்ணே சாக்குத் துண்டைட் பற்றியே பெரிய சொற்பொழிவு செய்கிருய். நாம்எடுத்துக் கொண்ட தலைப்புக்கு வா. சங்கரன் : சாக்குத்துண்டு கிடைக்கவில்லையாளுல் அ வ் வீ ட் டி ல் கிடைக்கிற தலையணை, பாய், சமுக் காளம், மெத்தை, போர்வை, கம்பளி, மெழுகுசேலே மண், மணல் இவற்றுள் கையில் எது கிடைக்கிறதோ அதைக் கொண்டு தீயை அவிக்கவேண்டும். எரிகிற உடையின் மற்றைய பாகத்தை மடித்தும் தீயை அவிக்க லாம். கழற்ற முடியுமானல் எரிகிற உடையையே அவிழ்த்து வீசி விடலாம். கிழித்து எரியலாம். அந்த நேரத் தில் எது சுலபம் எ ன் று தோன்றுகிறதோ அதையே காலத்தை நீட்டிக்காது உடன் செய்யவேண்டும். மணி: அதற்குப் பின் செய்யவேண்டியது யாது? சங்கரன் : நெருப்பால் உடம்பு பாதிக்கப்பட்டிருக் கிறதா என்பதைப் பார்க்கவேண்டும். அதற்கு இடையில் அதிர்ச்சியைப் போக்க வேண்டும். பாதிக்கப்பட்ட புண்ணில் உடை ஒட்டிக்கொண்டு இருந்தால் அப்பாகத் ኃጠ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முதலுதவி.pdf/32&oldid=872721" இலிருந்து மீள்விக்கப்பட்டது