பக்கம்:முதலுதவி.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆடையை ஆதாரமாய் வைக்கவேண்டும். முகத்தைப் பக்கவாட்டமாய்த் திருப்பி வைக்கவேண்டும். அவனது விலாப் பக்கமாய்ச் சென்று முழங்கால் இட்டு இருந் து. விலாக்களைத் தாண்டி முதுகு எலும்பின் கடைசி வரிசை களின் அடிப்பாகத்தில் இரு கைகளையும் பரப்பவேண்டும். இம் முதுகு எலும்புகள் மார்பு எலும்பின் பின் பாகங் களே. கையை எடுத்துவிடாமல் படிப்படியாய் அழுத்திப் பின் படிப் படியாய் கனத்தைக் குறைக்கவேண்டும். துக்கிலிட்டவன் மூச்சுவிடும் வ ைர யி ல் இப்படியே செய்யவேண்டும். மூச்சுவிடத் தொடங்கியதும் சூடான பானம் கொடுத்துக் களைப்பைத் தீர்த்து, அதிர்ச்சியைப் போக்கக்கூடிய சில வார்த்தைகள் சொல்லவேண்டும். மணி : உயிர் உற்பத்தி ' என்று இன்று நீ சொன்ன புதிய சொற்ருெடருக்குப் பொருள் முதலில் எனக்குத் தெரியவில்லை. இதைத்தான் நீ சொல்லியபடி நான் முன்பே தெரிந்திருக்கின்றேனே. மங்கை : ஏ சித்தப்பா! நீ சொல்வது கதை சொல் வதுபோல் இருக்கிறது. சிறுமியாகிய எ னக் கே நீ சொல்லுவது நன்கு தெரிகிறது. இன்னும் கே ட் க வேண்டும் போல் இருக்கிறது. ஆகையினல் கெட்ட காற்றினல், புகையில்ை ஏற்படும் திக்கு முக்காடலே விவரித்துச் சொல்லு. சங்கரன் : போர்க் காலங்களில் வி ட க் கா ற் று உண்டாகும். ஆலேகளில் நிலக்கரிக் காற்று ஏற்படும். பாழுங்கிணறு, சாக்கடைக்குழி முதலியவற்றிலும் உட் கொள்ள முடியாத கெட்ட காற்று ஏற்படும். இக் 26

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முதலுதவி.pdf/38&oldid=872727" இலிருந்து மீள்விக்கப்பட்டது