பக்கம்:முதலுதவி.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மங்கை : 1956ஆம் வருடம் மார்ச்சு மாதம் பதினரும் காளான் ஒரு நாளும் மறக்கமாட்டேன். எனது அப்பல் மாமா முதலியோர் அலுவலகம் சென்று இருந்தனர்: அதற்குமுன் கொஞ்சநாளாகவே எனது மணி சித்தப்பா பேட்டைப் பண்ணிக்கொண்டு வந்தான். ஒருவருக்கும் தெரியாது ஊர் ஊராய் ஒடிஞன். புகைவண்டியில்கூட 'ட்டு இல்லாது பல ஊர்கள் சுற்றினன். படிப்பைப் பாழ். படுத்தின்ை. எங்காவது அவனுக்கு ஆபத்து ஏற்படலாம் ன்று யாவரும் எண்ணினுேம். அவன் கதை சொன்னுல் விரியும். சுருக்கமாகக் கூறினல் நம்மை அடிமைப்படுத்தி ஆண்ட ஆங்கிலேயரின் முதல் தலைவனுகிய கிளேவின் இளமைப் பருவத்தை ஒத்து இவனது இளமைப்பருவமும் விளங்கிற்று. - இப்பொழுது அவன் நல்ல பிள்ளைபோல் இருக் கின்ருன். எதில் இருந்து தெரியுமா? சென்ற மார்ச்சு மாதத்தில் இருந்து. அன்று ஒரு நாள் அவன் இரு சக்கர வண்டியில் ஏறி மாவட்டத் தலைவர் இருக்கும் அலுவல கத்தின் ஓர் பக்கம் இருக்கும் அஞ்சல் அலுவல் அகம் சென்று வீடு திரும்பினுன் வருகிற வழியில் மதிச்சிய மும் செனய்நகரும் ஒன்ருய்ச் சேருகிற சாலேயின் மத்தி யில் மணல் ஏற்றிச் செல்லும் நெய்யாவி வண்டியில் அகப் பட்டு அபாயத்திற்கு உள்ளானன். இதுவே கெட்ட பிள்ளைகளின் கதி ஆகும். அபாயத்தில் அ. க ப் ப ட் ட மணியின் வலக்கை எலும்பு முறிபட்டு இரத்தப் பெருக்கு எடுத்து ஓடியது. அரசாங்கத்தாரின் வைத்திய சால்ே யில் மூன்று மாதங்கள் வைக்கப்பட்டான். அங்குள்ளார் யாவரும் நன்கு கவனித்தனர். அப்படி இருந்தும் அவனது கை இவ்வாறு இருக்கிறது. --

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முதலுதவி.pdf/47&oldid=872737" இலிருந்து மீள்விக்கப்பட்டது