பக்கம்:முதலுதவி.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஏற்பட்டது கண்டோம். ஆனல் எலும்பு உடைப்பு அவசியம் வைத்தியரின் உதவி வேண்டும். முதல் உதவியும் வேண்டும். இதற்கு இவ்விரு உதவியும் வேண்டும்.

மங்கை :- சித்தப்பா ! இந்த எலும்பு உடைப்பு சாதாரணமாக நடைபெறுகிறது. கல் தட்டிக் கீழே விழுந்தால் எலும்பு உடைப்பு. கதவில் ஏறிக் கீழே விழுந்தால் எலும்பு உடைப்பு. மாடிப் படியில் தடுமாறினல் எலும்பு உடைப்பு. தண்ணீர் உள்ள சிமெண்டுத் தரையில் வழுக்கி விழுந்தால் எலும்பு உடைப்பு. விளையாட்டிலுங்கூட எலும்பு உடைப்பு. எலும்பு உடைப்பு எங்கும் காண்கின்றது.

சடுகுடு, பந்தாட்டம், உயரம் தாவுதல், நீளம் குதித்தல் முதலிய ஆட்டங்களில் அடிக்கடி இது ஏற்படுகிறது. இதற்குரிய முதல் உதவியை ஒவ்வொருவரும் தெரிய வேண்டியது அவசியமே. நீதான் வாயாடி என்று நினைத்தேன். நானும் ஒரு வாயாடி ஆக மாறி வருகி றேன் என்பதை இப்பொழுது உணருகிறேன்: சொல்ல வேண்டியதைச் சொல்லித்தானே ஆகவேண்டும் உனது வாயைச் சிறிது திற.

சங்கரன் :- மங்கை சொல்லிய பல காரணங் களால் எலும்பு உடைவது உண்டு. எலும்பு உடைந்த இடத்தில் வீக்கம், வலி, பளபளப்பு ஏற்படும். உடைந்த எலும்பை ஒன்று சேர்க்க நமக்குத் தெரியாது. ஆகவே காயம் பட்ட இடத்தை நாம் ஒன்றுமே செய்யக்கூடாது. ஏனென்றால் எலும்பின் உடைந்த நுனிகள் உள் இருக் கின்ற தசைநார்களைக் குத்தி மென் மேலும் கிழித்து விடும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முதலுதவி.pdf/49&oldid=1146171" இலிருந்து மீள்விக்கப்பட்டது