பக்கம்:முதலுதவி.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

蠻· --- இவ்வாறு செய்தால் உடைந்த எலும்பு அசையாது ஒரு புண்ணே உண்டாக்காது. உடம்பில் எந்த இடத்தில் கழிகளே வைத்துக் கட்ட முடியவில்லையோ அவ்விடத்தில் துணியை அகல வாட்ட மாயும் நீளவாட்டமாயும் க ட் டி. இரு துணிகளேயும் முடிச்சுப் போடவேண்டும். உ ைட , த லும்பு அப்பொழுது அசையாது இருக்கும். கை, மார் . தோள் முதலியவைகள் மற்ை ற உறுப்புக்கள் அசைந்தால் தாமும் அசையும் ஆகையால் தோளில் எலும் உ ைந்தால் கையையும் அசையாது இருக்கும்படிச் செய்யவேண்டும். கழுத்தைச் சுற்றித் தொங்கவிட்டிருக்கும் ஒரு துணியில் கையைத் தாங்கும்படி செய்யவேண்டும். மார்பு எலும்பு உடைந்தால் அதைக் கற்றி ஒரு துண்டு கொண்டு கட்டவேண்டும். அதற்குக் கீழ் இருந்து தொடங்கி முன்னதன் மேலேயே இன்னும் ஒரு துண் டைக் கட்டவேண்டும். நொறுங்கின எலும்புக்குப் பக்கம் உள்ள கையைக் கழுத்தைச் சுற்றித் தொங்கவிட்டு இருக்கும் ஒரு துணியில் தாங்கும்படிச் செய்யவேண்டும். வாயில் இருந்து இரத்தம் வந்தால் மார்பில் துணி கட் டுதல் கூடாது. கையைமட்டும் தாங்கும்படிச் செய்யவேண்டும். உடலில் அணிந்து இருக்கும் ஆடைகளைக் கிழித்து எடுக்கவேண்டும். எலும்பு உடைபட்ட பக்கமாக எலும்பு உடைந்தவனப் புரட்டி அதன்அடியில் ஒரு தலையணையை வைக்கவேண்டும். o

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முதலுதவி.pdf/55&oldid=872746" இலிருந்து மீள்விக்கப்பட்டது