பக்கம்:முதல் பொது நூலக இயக்கம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

3

நூலகத்திற்குக் கொடுத்துதவினார். ஆனால் இந் நூலகம் 10-வது நூற்றாண்டின் மத்தியில் சாமர்செட் கோமகனான எட்வர்ட் என்பவரால் வாங்கப்படவே, இதனைப் பொது மக்கள் பயன்படுத்த முடியாது போயிற்று. நார்விச், பிரிச்டல், இப்சு விச், லெச்டர் என்ற நான்கு இடங்களிலும் நகர நூலகங்களும் (Town Libraries), பக்கிங்காம்சயர் என்னுமிடத்தில் ஒரு கிராமிய இலவச நூலகமும் பதினேழாவது நூற்றாண்டில் திறக்கப்பட்டன. ஆனால் மக்களிடையே ஆர்வம் இல்லாது போயினமையால், இந் நூலகங்கள் விரைவில் வளர்ச்சியுறாது போயின.

சுழல் நூலகங்கள் (Circulating Libraries)

போர்க்காலங்களிலே நூல்கள் வாங்கும் வழக்கம் மிகவும் அதிகமான காரணத்தினால், பெங்குனி போன்ற பதிப்பகத்தார் பலர் கையடக்க மலிவு நூல்களைப் பல்லாயிரக் கணக்கிலே வெளியிட்டதன் காரணமாக ஆங்கிலேயர்கள் பிற நாட்டு மக்களை விட அதிகமாக நூல்களைப் பெற்றுப் படிக்கத் தலைப்பட்டனர். நெடுங்கதைகள், வாழ்க்கை வரலாறுகள், பயண நூல்கள் முதலிய பொழுது போக்கு நூல்களை ஆங்கிலேயர்கள் பெரிதும் விரும்பிப் படிக்கின்றனர். பொது நூலகங்களை மட்டுமன்றி, சுழல் நூலகங்களையும் (Circulating Librariss) பயன்படுத்துகின்ற ஆங்கிலேயர்கள் ஒருவர், இருவர் அல்லர்; மிகப் பலராவர். தெளிவாகக் கூறினால், குறிப்பு நூலகங்களைத் (Reference Libraries) தவிர, ஏனைய நூலகமெலாம் சுழல் நூலகங்களே. சுழல் நூலகம் என்ற பெயரையுடைய ஒருவகை நூலகத்தின் வேலை முறை பின்வருமாறு:–