பக்கம்:முதல் பொது நூலக இயக்கம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

தாம். பதினெட்டாம் நூற்றாண்டிலும், பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் சிறுபான்மையான மக்களே படித்து வந்தனர்.1870-ல் கூட நூற்றுக்கு இருபத்தைந்து பேர் படியாத பாமர மக்களாகவே வாழ்ந்து வந்தனர். கல்வி, நடுத்தர வகுப்பு மக்களிடையே பரவிய பொழுது, வாழ்க்கைச் செலவு உயர்ந்து, நூல்களின் விலை அதிகமாகி வாங்குவதற்கும் அரிதாக இருந்தபோதிலும், நூல்களை வாங்கிப்படிக்கும் வழக்கம் அதிகரித்தது. நண்பரும், உற்றார் உறவினரும் சேர்ந்து சேர்ந்து பணம் போட்டுப் பல நூல்களை வாங்கித் தம்முள் மாற்றி மாற்றிப் படித்துக்கொண்டார்கள். இவர்கள் தம்முடைய வீடுகளிலே ஏதேனும் சடங்கு. திருமணம் போன்ற நிகழ்ச்சிகளிலே கூடியிருக்கும்பொழுது, தாம் படித்த நூல்களைப் பற்றிப் பேசுதலும், நூற்பொருள் பற்றி ஆராய்தலும், இனிமேல் ஒவ்வொருவரும் என்ன என்ன நூலை வாங்குதல் வேண்டும் என்று முடிவு செய்தலும் வழக்கங்களாகும். பழைய சந்தா நூலகங்களும் இம் முறையிலே இயங்கி வந்தன. ஆனால் அவை இவற்றைப் விடப் பெரியவை. லிவர்பூல் நூலகம், லிட்ச் (Leeds) நூலகம், பிராபோர்டு நூலகம், இலக்கிய மன்றம் , நியூகாசில் இலக்கிய மெய்யறிவு மன்றங்கள் முதலிய பல நூலகங்களும் மன்றங்களும் பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலே தோன்றி, மக்கள் உள்ளத்திலே படிக்கும் வேட்கையை எழுப்பிப் பண்பாட்டுப் பெருமன்றங்களாகத் திகழ்ந்தன. மேற்குறித்த மன்றங்களும் நூலகங்களும் , தம்மோடொத்த சிறந்த நூலகங்கள் இருப்பினும், இன்றும் நின்று பணியாற்றி வருகின்றன. பிற நூலகங்களிற் சில காலப்போக்கில் வேறு சில நூலகங்களோடு ஒன்றின;சில அழிந்தன.