பக்கம்:முதல் பொது நூலக இயக்கம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

15


ஒரு நாட்டின் நல்வாழ்வுக்கு அரும் பெருந் தொண்டுகள் ஆற்றியுள்ள ஒரு மன்றத்தினைத் தோற்றுவித்த பெருமக்களை நாம் மறத்தல் கூடாது. எனவே இங்கிலாக்திலே பொது நூலகம் பல்லாயிரக்கணக்கிலே நாடெங்கிலும் தோன்றுமாறு மக்களை ஊக்குவித்த பெருமக்களிலே குறிப்பிடத்தக்க மூவரை நாம் இந்த இடத்திலே எண்ணிப் பார்த்தல் இன்றியமையாத ஒன்றாகும். அம் முப்பெரு நன்மக்களின் திருப் பெயர்கள் வருமாறு :

1. வில்லியம் ஈவர்ட் (William Ewart), ச்காட்லாந்துப் பாராளுமன்ற உறுப்பினர்.

2. எட்வர்டு எட்வர்ச் (Edward Edwards), பிரிட்டன் பொருட்காட்சி உதவி அதிகாரி.

3. சோசப் பிரதர்டன் (Joseph Brotherton), லங்காசியாவின் பாராளுமன்ற உறுப்பினர்.

இங்லாந்து நாட்டுப் பாராளுமன்றம் எல்லோரும் செலவில்லாமல் பயன்படுத்தக்கூடிய பொது நூலகங்கள் பலவற்றை ஏற்படுத்துதற்குரிய வழி வகைகளே ஆராய்ந்து அறிக்கை ஒன்று தயாரித்தலுக்கு ஓர் ஆராய்ச்சிக் குழு ஏற்படுத்த வேண்டும் என்று பாராளுமன்றத்தை 1849ல் துண்டியவர் ஈவர்ட் என்பவராவர்.

இதற்கிடையில் எட்வர்ட்ச் என்ற நூலக வரலாற்றறிஞர், பொது நூலகங்கள்பற்றிய தகவல்களையும் நடைமுறைகளையும் ஆராய்ந்து அறிந்து தொகுத்துவிட்டார். எனவே, ஈவர்ட் என்பவர், பிரதர்டன் என்ற பாராளுமன்ற உறுப்பினர் ஆதரவுடன் 1850-ல் பொது நூலகச் சட்டம் ஒன்றைப் பாராளுமன்றத்தில் கொண்டு வந்தார். இதைக் கூட பாராளுமன்றத்தில் ஒரு தன்னலக் கூட்டம்