பக்கம்:முதல் பொது நூலக இயக்கம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

எதிர்த்தது. அக்கூட்டம் பொதுமக்கள் அறிவு பெற்று வளர்ச்சி அடைவதை விரும்பாத பிற்போக்குக் கூட்டமாகும். அக்கூட்டம் எதிர்த்த போதிலும் நூலகச் சட்டம் நிறைவேற்றப்பட்டு விட்டது. இதன்மூலம் நகர் மன்றங்கள், ஒரு பவுன் வருமானத்திற்கு ஓர் அரைப்பென்னி (Half penny) நூலகங்களுக்காகச் செலவிடலாம் என்ற நிலை ஏற்பட்டது. ஆனால் நூல்களுக்காக நகர் மன்றங்கள் செலவிடுதல் கூடாது; நூல்களை மக்கள் தாங்களாகவே வழங்கவேண்டும் என்றும் இச்சட்டம் கூறியது. இதுவும் இது போன்ற பிற கட்டுப்பாடுகளும் நூலகச் சட்டம் கொண்டுவந்ததின் நோக்கங்களைத் தடைசெய்து நிறைவேறிவிடாமல் செய்து வருகின்றன என்ற உண்மை விரைவில் எல்லோருக்கும் தெரியலாயிற்று. நாளடைவில் இத்தடைகளும் பின்னர் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்ட நூலகச் சட்டங்களால் நீக்கப்பட்டன. என்றாலம் நூலகங்கள் முழு வளர்ச்சியடைவதற்குரிய தடைகள் இருக்கவே செய்தன. அவற்றுள் குறிப்பிடத்தக்க தடையாவது ஒரு பென்னிதான் ஒரு நூலுக்குச் செலவிடல் வேண்டும் ; பட்டியாட்சி மன்றங்களுக்கு (County Councils) நூலகம் ஏற்படுத்த அதிகாரம் இல்லை. இந்தத் தடைகள் 1919 ஆம் ஆண்டுவரை நீக்கப்படவில்லை.

பொது நூலகங்கள்

மாஞ்செச்டர், நார்விச், போல்ட்டன் ஆக்ச்போர்டு, வின்செச்டர் ஆகிய நகரங்களில்தான் முதன் முதல் நூலகச் சட்டத்திற்குட்பட்ட பொது நூலகங்கள் ஏற்படுத்தப்பட்டன.