பக்கம்:முதல் பொது நூலக இயக்கம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

17

தொடக்கக் கல்விச் சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டாகிய 1870-ஆம் ஆண்டு வரையில் நூலகங்கள் பெவாகவே வளர்ந்து வந்தன. அந்த ஆண்டில் முப்பத்தைந்து. நகரங்களில் பொது நூலகங்கள் பணியாற்றி வந்தன. அதற்குப் பின்னர் அவை நல்ல முறையில் விரைவாக வளரத் தொடங்கிவிட்டன. இவ் வளர்ச்சிக்குக் காரணம் கல்வி முன்னேற்றமே என்பதில் ஐயமில்லை. என்றாலும், பொதுமக்கள் சிலரின் பண உதவி நூலக வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியது; அதிலும், செய்தி இதழின் செல்வ முதலாளியாக விளங்கிய பாசிமோர் எட்வர்ட்ச் (Passmore Edwards), நூலக வளர்ச்சியாளர் ஆக்த்ரூ கார்னீக் (Andrew Carnegie) என்ற இருவரும் நூலக வளர்ச்சிக்குச் செய்த பணி குறிப்பிடத்தக்க சிறப்புடையது. சட்டத்துக்குட்பட்ட முறையில் நூலகங்களை பத்த விரையும் அதிகாரிகளுக்கு நூலகக் கட்டிடங்கள் அளிப்பதற்குரிய ஏற்பாடுகளைக் கார்னிக் என்பவர் தன் வாழ் நாளிலேயே செய்யலானார். 1913-ஆம் ஆண்டில், அவர் தான் எண்ணிய பணியை எண்ணியாங்கு முடிப்பதற்குக் "கார்னிக் யுனைடட் கிங்டம் நிதியளிப்பகம்" என்பதை ஏற்படுத்தினார். தோன்றிய பொழுது இவ்வமைப்பு கார்னிக் தம் எண்ணப்படியே சிறந்த முறையிலே தொண்டு பல செய்திருக்கிறது. ஆனால் இப்பொழுது இதன் தொண்டு வேறு வழிகளிலே நடைபெற்று வருகிறது. நூலகத்திலே நூல்களைப் பெருக்கல்,நூலகப் பணிமக்களை அமர்த்தி வேலை செய்வித்தல், அவர்கள் பணிக்கு ஊக்கம் அளித்தல், ஆதரவு நல்குதல்,நூலகத்துறையிலே மாணவர்களைப் பயிற்சி பெறுமாறு செய்தல் போன்ற வேறு துறைகளிலேயே இன்று அச்சு நிறுவனம் சிறப்பாகக் கவனம் செலுத்திவருகிறது.

நூ-2