பக்கம்:முதல் பொது நூலக இயக்கம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

21

மேலும் பெருக்கிக் கொள்ளுவதோடு, அத்துறையிலே சிறந்த வல்லுநராகவும் விளங்கலாம். வாரத்துக்கு ஒரு நூல் வீதம் வாங்கினால்கூட ஆண்டுக்கு இருபத்தைந்து பவுன் செலவாகும். மிகவும் மலிவாக விற்கும் தாள் பை நூல்கள் (paper - backed editions) வாங்கினால் கூட ஐந்து பவுன் வேண்டும். சிறந்த படிப்பாளிகட்கு, இதைவிட அதிகமாகச் செலவாகும். சிறந்த மாணவர். ஆராய்ச்சியாளர்கள் ஓரிரு வாரங்களுக்குள்ளே நூல்களுக்காக நூறு பவுனுக்கும் மேலாகச் சற்றும் தயக்கமின்றிச் செலவழிப்பர். ஒரு மாணவன் அவனுக்குப் பிடித்த அறிவுத்துறையிலே, அவ்வப்பொழுது வெளியாகும் ஆராய்ச்சிகளையும் உண்மைகளையும் அறிவதற்கும், அவன் வேண்டும் விளக்கங்களையும், குறிப்புகளையும் வேண்டும் சமயத்திலே, நூலக அதிகாரிகள் எடுத்து அளிப்பதற்கும், அவன்றன் ஊரிலே நூலகம் இல்லாவிட்டால், நூல் விற்பனையாளர் நூற்றுக்கணக்கான பவுன்கள் செலவழிக்க வேண்டும். எனவே அந்த மாணவன் பெரும்பாலும் தன் நோக்கம் நிறைவேறாமலே செல்லுவான்; அதனால் அவன் துன்பம் பெற நேரிடும்.

அவன் வேண்டிய நூல்கள் கொடுக்கப்பட்டாலும், ஒவ்வொருவரும் நூலகத்தைப் பயன்படுத்தத் தொடங்கினால், செலவு உறுதியாக அதிகரிக்கும். சிற்றூரிலும் சரி, பேரூராயினும்சரி, ஏழையாயினும் சரி. செல்வானாயினும் சரி, மூன்று பேருக்கு ஒருவர் நூலகத்தை முழு அளவில் பயன்படுத்துகின்றனர். ஏறத்தாழ ஒரு கோடியே நூறாயிர மக்கள் படிப்பதற்காக நூல்களை