பக்கம்:முதல் பொது நூலக இயக்கம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

25

கின்ற நூல்களை எளிதாக எடுத்துக் கொள்ளலாம். இன்று இம்முறைதான் உலகில் பெரும்பான்மையான நூலகங்களில் நடைமுறையில் உள்ளது.

இன்று ஒரு சில இடங்களுக்குத்தான் நூலக வசதி இல்லையென்று கூறலாம். அவ்விடங்கள் அனைத்திலும் வாழும் மக்கள் தொகை, 60,000 என்றும், இங்கிலாந்து நாட்டிலே அச் சிறுபான்மையோர் தவிர மற்ற எல்லா மக்கட்கும் பொதுநூலக வசதி இருக்கிறதென்றும் அறிக்கை ஒன்று கூறுகின்றது. மேலும் நூலகக் கூட்டுறவு முறையில் (Library Cooperation) எல்லாப் பொது நூலகங்களும் ஒன்றோடொன்று தொடர்புடையனவாய், பார்வியக்கும் வண்ணம் பணியாற்றுகின்றன. இன்று உலக நாடுகளில் இங்கிலாந்தில்தான் நூலகக் கூட்டுறவு முறை சீரிய முறையில் நடைபெறுகின்றது எனக் கூறலாம். தேசிய மத்திய நூலகத்துடன் எல்லா வட்ட மத்திய நூலகங்களும், எல்லா வட்ட மத்திய நூலகங்களுடன் அந்தந்தப் பகுதியில் இருக்கும் அனைத்துப் பொதுநூலகங்களும் இணைக்கப்பட்டுள்ளன. இம்முறை வெற்றி பெறுவதற்குக் கார்னிக் நிதியிலிருந்து பெருந்தொகை செலவழிக்கப்பட்டது. இதற்கிடையில் நூலகச் சங்கத்திற்குப் பேரரசி விக்டோரியா கி. பி. 1808-ல் அரசியல் ஒப்பம் அளிக்கவே, நூலகச் சங்கத்தார் இதன் பின்னர் நூலகங்களில் திறமையுடன் பணி புரிவதற்குத் தகுதி வாய்ந்த வல்லுநர்களை உருவாக்குவதில் முனைந்தனர். கி. பி. 1885 - ல் முதன் முதலில் இச் சங்கத்தார் நூலகத்தார் தேர்வு ஒன்று நடத்தி வெற்றி பெற்றவர்களுக்குச் சான்றிதழ்கள் நல்கினர். நாளடைவில் படிப்பின் தரம் உயர்த்தப்பட்டது. நூலகக் கல்வித் திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டது. 1938-ல் பதிவு