பக்கம்:முதல் பொது நூலக இயக்கம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

செய்துகொண்ட நூலகத்துறை வல்லுநர்களுக்கு அவர்கள் தகுதிக்கும் அனுபவத்திற்கும் ஏற்ப அறிஞர் (Fellow), துணையறிஞர் (Associate) என்ற பட்டங்கள் கொடுக்கப்பட்டன. இன்று திறமையும் அனுபவமும் வாய்ந்தவர்கள் தாம் இச் சங்கத்தாரால் நடத்தப்படும் தேர்வினை எழுதுதற்குத் தகுதி வாய்ந்தவர்கள் எனக் கருதப்படுகின்றனர். நூலகத் துறையில் பணிபுரிய விரும்பும் எவரும் முதலில் தங்களைப் பதிவு செய்துகொள்ளுதல் வேண்டும். இன்று இந்நாட்டில் பொதுநூலகத் துறையில் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் பணி புரிகின்றனர். இவர்களில் மூவாயிரத்திற்கு மேற்பட்டோர் நூலகச் சங்கத்தாரால் நடத்தப்படும் இறுதித் தேர்வில் வெற்றி பெற்றுப் பதிவு செய்யப்பட்ட நூலகர்களாகும். இவ்வாறு நூலகச் சங்கம் திறமையும் பயிற்சியும் உடைய நூலகர்களை நாட்டிற்கு நல்கியதோடமையாது, நூலக மாகநாடுகள் கூட்டியும், சொற்பொழிவுகள் நிகழ்த்தியும், நூலகங்களைப் பற்றிய செய்திகளை அவ்வப்பொழுது மக்களுக்கு வெளியிட்டும், பாடநூல்களை அச்சிட்டும், மக்களை நூலக மனப்பான்மை உள்ளவர்களாய் மாற்றியமைத்து, பொது மக்கள் வாழ்விலே, பொதுநூலகத் துறையிலே, ஒரு மறு மலர்ச்சியை ஏற்படுத்தியது என்பது எவரும் மறுக்க முடியாத உண்மையாகும். இந் நாட்டு மக்களில், மொத்த மக்கள் தொகையில் கால் பாகத்திற்கு மேற்பட்டவர்கள் இன்று பொது நூலகங்களை ஒழுங்காகப் பயன்படுத்துகின்றனர். அண்மையில் தரப்பட்டுள்ள புள்ளி விவரங்களின் படி 80 கோடிக்கு மேற்பட்ட மக்கள் இப் பொது நூலகங்களால் பயன்பெறுகின்றனர். 33,000-க்கு மேற்பட்ட இடங்களில் நூல்கள் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு