பக்கம்:முதல் பொது நூலக இயக்கம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

29

துக்கெனத் தனியமைப்புடைய கட்டிடம் ஒன்றும் இதுவரையும் கண்டுபிடிக்கப்படா விட்டாலும், இது தான் நூலகக் கட்டிடம் என்று கண்டுபிடிப்பதில் கடினம் உறுதியாக இருக்கும். ஏனென்றால்.பெரும்பாலும் நூலகக் கட்டிடம் ஒரு மாடியுள்ளதாக இருக்கும். சில நூலகங்களிலே, தரையிலிருந்து கூரைவரையில் சுவர்களில் சாளரங்கள் இருந்தபோதிலும், பெரும்பாலான நூலகங்களிலே, தரைமட்டத்திலிருந்து ஆறடிக்கு மேற்பட்டே சாளரங்கள் அமைக்கப்பட்டிருக்கும். சாளரங்களின் வழியாக வருவோர் நூல் அறைகளை நன்கு காண வாய்ப்புண்டு. ஊர்திகளும், மிதிவண்டிகளும் நிற்பதற்குரிய பூங்காவை முன் கொண்டு நூலகம் தெருவை நோக்கி அமைந்திருக்கும். நூலகக் கட்டிடம் எந்தவிதச் சிற்ப வேலைப்பாடுமின்றி 'மொழு மொழு’ என்று காணப்படும். வாயிலிலே ஒரு சிறிய கூடம் (Hall) இருக்கும். நூலகத்தின் பின்பகுதியிலே சிறுவர் நூலகம் இருக்கும். சிறுவர் நூலகம் முன்புறத்திலே தெருவின் அருகிலே இருக்குமானால், போக்குவரத்து அதிகமாக இருப்பதால் தீங்கு நேரும் என எண்ணிச் சிறுவர்கள் நூலகத்திற்கு வரத் தயங்குவார்கள்.

நீங்கள் நூலகத்துக்குள் நுழைந்த பொழுது அங்கே வேண்டிய வெளிச்சமும் இடமும் காற்றும் உங்களை 'வருக வருக' என வரவேற்கும். நாலறையும், சாய்வு மேசையும் தூய்மையாக நூல் குவியல் இன்றிக் கண்ணைக் கவர்ந்து நிற்கும். நூல் எடுத்திடும் நூலறைகட்கு அல்லது அலமாரிகட்கு அருகிலே மக்கள் கூட்டமாக நின்றபோதிலும், ஒவ்வொருவரும் பிறரை