பக்கம்:முதல் பொது நூலக இயக்கம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

31

பொருளோடு தொடர்புடைய பிற பொருள் நூல்களையும் பார்க்க ஏதுவாகிறது. பெரும்பான்மையான நூலகங்கள் 'டுயி' பதின்முறை (Dewy Decimal Classification) என்ற முறையைப் பின்பற்றித்தான் நூல்களைப் பத்து வகையாகப் பிரிக்கப்பட்டு தனித்தனியே அடுக்கிவைக்கப் பெற்றுள்ளன.

1. பொது நூல்கள்.
2. மெய்யுணர்வு நூல்கள்.
3. சமய நூல்கள்.
4. சமுதாய நூல்கள்.
5. மொழி நூல்கள்.
6. இயற்கைப்பாட நூல்கள்.
7. பயன்கலை நூல்கள், செய்முறை அறிவியல்
நூலகள்.
8. நுண்கலை நூல்கள்.
9. இலக்கிய நூல்கள்.
10. வரலாறுகள் (பூகோள நூல், பயண, தன் வரலாற்று நூல்கள்).

மேற்கூறிய ஒவ்வொரு துறையும் மேலும் பத்துப் பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றது. எடுத்துக்காட்டாக அறிவியல்என்பது பொது அறிவியல், கணிதம், வான நூல், பொறி நூல், கலவை நூல், நில நூல். பூநூல் (Palanthology), உயிர்நூல், மர நூல், விலங்கு நூல் என்று பிரிக்கப்படும். இப்பிரிவினை மேலும் மேலும் பிரிவுண்டு, இறுதியிலே, ஒரு குறிப்பிட்ட பொருளை அடையும்.

பிரௌன் பொருட் பிரிவு (Brown Subject classification) போன்ற சில பிரிவுகளை, ஒரு சில சிறு நூலகங்கள் மேற்கொண்டுள்ளன, பல்கலைக்கழக நூலகம், ஆராய்ச்சி நூல-