பக்கம்:முதல் பொது நூலக இயக்கம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

39

கிய வேலை, பொதுவான, சிறப்பான அகராதிகள், கலைக் களஞ்சியங்கள், அயல் நாட்டு அகராதிகள், ஆண்டு நூல்கள், வழிகாட்டிகள். உலகப்படங்கள், அறிக்கைகள் அரசினர் வெளியீடுகள், பாராளுமன்றச் சட்ட நூல்கள், அரசாங்க விதி நூல்கள், கணிதப் பட்டியல்கள், அட்டவணைகள், தொழிலக வெளியீடுகள் முதலிய பல துறை நூல்களையும் நூலகம் சேர்த்து வைத்துக்கொள்ள வேண்டும். இவற்றோடு, பாட நூல்கள், முக்கியமான அறிவுத் துறை நூல்கள், பருவ வெளியீடுகள், செய்திக் குறிப்புக்கள், துண்டு வெளியீடுகள், அட்டவணைகள் ஆகியவற்றையும் சேர்த்துவைத்தல் வேண்டும். ஒரு சிலர் தவிரப் பெரும்பாலோர் தாங்கள் விரும்பும் நூலையோ, அறிக்கையையோ எடுக்க நூலகத்தார் உதவியை வேண்டுவர். நூலகத்தாரது பயிற்சியும் பழக்கமும் இந்த இடத்தைத் தவிர வேறெங்கும் வேண்டியதில்லை. தகுதியுடைய நூலக உதவியாளர் ஆயிரக்கணக்கான வினாக்களுக்கு விடைகூற வேண்டியது அவரது வேலையின் பெரும்பகுதியாகும். கடினமான சிக்கலுக்கு, நல்ல நுட்பமான முறையைக் கையாளலாம். அதனல், வீண்வேலை கிடையாது. நூலகத்தில் உள்ளவை எவை, இல்லாதவை எவை என்பதை அவர் அறிவார் ; இருப்பன உள்ள இடமும், எடுக்கும் விதமும் அவருக்குத் தெரியும். அவற்றால் வேண்டியன அளிக்க முடியாவிடில், வேறெங்குத் தேடுவது என்பதும் அவருக்குத் தெரியும்.

குறிப்பு நூலகத்துக்கு எந்த நேரத்திலும் பலர் வருவர். அதற்குக் காரணங்கள் வருமாறு : வீட்டை விட நூலகம் படிப்பதற்கேற்ற இடமாக இருக்கலாம்.