பக்கம்:முதல் பொது நூலக இயக்கம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

41

காது பிறந்த பயிற்சியும், நீண்ட நாள் பழக்கமும், பிற பொது நூலகங்கட்கு மிகவும் இன்றியமையாதனவாகும்.

இனி, ஏனைய இரு துறைகளைப் பார்க்கலாம். அவற்றிலே ஒன்று வெளியீட்டுத் துறையாகும். இத்துறையிலே, நாள். வார மாத, காலாண்டு, அரையாண்டு,ஆண்டு வெளியீடுகள் சேர்க்கப்பட்டிருக்கும், புதிய வெளியீடுகளும் காணலாம்.

பெரும்பாலான நூலகங்களிலே, காமன்வெல்த், அமெரிக்கா, இரசியா, பிரான்சு ஆகிய நாடுகளிலேயிருந்து வரும் வெளியீடுகள் பல உள. அவ்வாறு பல நாட்டு வெளியீடுகளைத் தருவித்தலின் மூலம், உலக நடப்புக்களை அன்றன்றைக்கு நூலகங்கள் மக்களுக்கு அறிவிக்கின்றன வெளியீடுகள் அறை ஒவ்வொரு நூலகத்திலும் சிறப்பாக இருக்கும். பெரும்பாலான நூலகங்களிலே நாளிதழ் அறைகளும் இருக்கும். இந்த அறைகள் வேலை தேடி நிலையங்கள் ஏற்படும் முன்பு, வேலையில்லாதோருக்குப் பெரும்பயன் தந்துகொண்டிருந்தன. விளம்பரங்கள் மூலம், நிலையங்கள் ஏற்பட்ட பின்பு, இவை படிப்படியாக, தம் செல்வாக்கை இழக்கத் தலைப்பட்டன.

நான்காவது பகுதி குழந்தைப் பகுதி. நூல் வழங்கும் பகுதி, குறிப்பு நூல்பகுதி, குழந்தை வெளியீட்டுப் பகுதி ஆகியன இந் நான்காவது பகுதியிலே உள. இப் பகுதியே அழகாகவும், தூய்மையாகவும், கவர்ச்சியாகவும் இருக்கும் பகுதியாம். அங்கே நூல் தட்டுக்கள் மிக மிகத் தாழ்ந்து இருக்கும். அதனால் சின்னஞ் சிறு குழந்தை