பக்கம்:முதல் பொது நூலக இயக்கம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

கூடத் தடையின்றி வேண்டிய நூலை எளிதாக எடுக்கலாம். அப்பொழுதுதான் படிக்கத் தொடங்கியிருப்போர்க் குரிய நூல்கள் தனித் தட்டுக்களிலே அடுக்கிவைக்கப்பட்டிருக்கும்.

குழந்தை நூலகம் ஏற்படுத்துவதன் நோக்கம், குழந்தைக்கு நூலின் மேல் ஆர்வம் ஏற்படும்படி செய்தல், நூலின் மதிப்பும் பயனும் அறியச்செய்தல், படிக்கும் பழக்கத்தைக் கைக்கொள்ளுவித்தல் என்பனவாம். இங்கே இருக்கும் நூல்கள் அழகாக இல்லாவிடில், மேற்கூறிய பயன்களில் எதுவும் உண்டாகாது. அழுக்கடைந்த நூல்களைக் குழந்தை கண்னெடுத்தும் பாராது. பார்ப்பினும் மதியாது. குழந்தை நூலகத்திலே முன்னரே தவருகப் பயன்படுத்தப்பட்ட நூல்களை வைத்தலில் ஒரு பயனும் இல்லை. பெரியோர் நூலகத்தைப் போன்றே பலதுறை நூல்களும் குழந்தை நூலகத்திலே இருக்கும். குழந்தைகளுக்குரிய பல்வேறு கதை நூல்கள் பல நூலகத்தில் - அஃதோடு, கவர்ச்சி மிக்கவையும், குழந்தைகளால் பெரிதும் விரும்பப்படுவனுமான நூல்களும் உண்டு. தற் பொழுது, குழந்தைகளுக்கென எழுதப்பட்ட நல்ல நூல்கள் மிகச் சிலவே என்பதில் நூலக அதிகாரிகளிடையே கருத்து வேறுபாடில்லை. இருப்பனவற்றிற் பெரும் பாலன, மிகமிகக் கீழ்த்தரமானவையாகவும், புள்ளி விவரம் செறிந்தனவாகவும் உள்ளன. குழந்தை நூல் எழுத விரும்புவார்க்கு நல்லதோர் எதிர்காலம் உண்டு. குழந்தைகளுக்கும், பழக்கமிக்க பெரிய மனிதர்களுக்கும் உள்ள வேறுபாடு, விருப்பம் பற்றியது அன்று: சொல் லாட்சியும், உள்ள வளர்ச்சியுமே. ஆம் அறிவுக் களஞ்சிய-