பக்கம்:முதல் பொது நூலக இயக்கம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

திலே, குழந்தை இலக்கியங்களை நீக்கிவிடுதல் முடியும் என்றாலும், அவற்றையும் நாம் இந்த நூலகத்திலே வைத்துக் கொள்ளலாம்.

பெரிய நகரங்களிலே கிளை நூலகங்கள் இருப்பது இன்றியமையாததாகும். தனிப்பட்ட ஆராய்ச்சியாளர்கள் பெரிய பொது நூலகங்களை நாடிச் சென்றாலும், பொதுவாக மக்கள் நூலகத்துக்காக நாள்தோறும் அரை மைலுக்கு மேலான தூரத்தை நடந்து கடக்க விருப்பங் கொள்ளார். இதற்காகவே கிளை நூலகங்கள் ஏற்படுத்தப்படுகின்றன. கிளை நூலகங்கள் பெரும்பாலும் வெளியே தரும் நூல்களையே அதிகமாகக் கொண்டிருக்கும். இன்றியமையாத சில குறிப்பு நூல்கள், சில வெளியீடுகள் ஆகியவையே அங்கே இருக்கும். பெரிய நகரங்களிலுள்ள கிளை நூலகங்கள் சிறிய நகர நூலகங்களைப் போல இருக்கும். சிறிய நகர நூலகத்தைவிட நகர நூலகம் வேறுபட்டது. நகரத்திலே கிளை நூலகங்கள் மிகுதி. பொது நூலகத்திலே, குறிப்பு நூலகம் அளவிலே பெரியதாகிக் கொண்டே செல்லும். இக்குறிப்பு நூலகம் இப்போது பலராலும் பயன்படுத்தப்படும் ஓர் அரிய ஆராய்ச்சிக் களமாக மாறிவிட்டது இக்குறிப்பு நூலகங்கள் நகரக்குறிப்பு நூலகமாக மட்டுமன்றி, நாட்டுப் பெரு, நூலகமாகவும், பல்துறை நூலகங்களாகவும் பணியாற்ற வேண்டும். இவ்வாறு, குறிப்பு நூலகத்தின் பணி அறிவுக்களஞ்சியம் செய்யும் பணியின் அளவுக்கு விரிவடைந்திருக்கிறது. குறிப்பு நூலகத்திலே உள்ள நூல்களிலே பெரும்பாலன பொது நூலகத்தினின்றும் பிரிக்கப்பட்டனவாகும். இக்குறிப்பு நூல்களை எத்தகைய