பக்கம்:முதல் பொது நூலக இயக்கம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

உள்ளூர் கழகம் கூட்டம் நடத்த, சொற்பொழிவு செய்யத் தக்க இடங்களும் நூலகங்களிலே ஏற்படுத்தப்பட்டுள்ளன. இத்தகைய ஏற்பாடுகள் நகர நூலகங்களில் மட்டுமன்றிச் சிற்றூர் நூலகங்களிலும் உள.

இதுகாறும் கூறியவை இங்கிலாந்திலுள்ள ஐந்நூற்றுக்கு மேற்பட்ட நகர நூலக அமைப்புக்களைப் பற்றியவை என்றாலும் கூட, அவையெல்லாம் தனிப்பட்டவை என்பதும், பெரிதும் ஒன்றுக்கொன்று வேறு பட்டவை என்பதும் சற்றும் மறக்கக் கூடாதனவாம். மேற்கூறிய நூலகங்களிலே ஒன்றிரண்டு நூலகங்கள் தனித்த முறையிலே விளக்கப்பட வேண்டியனவாக இருக்கலாம். அவற்றை இங்கே விரிக்கின் பெருகும். பிரிட்டன் நூலகங்கள் எவ்வாறு பணியாற்றுகின்றன என்பதைப் பார்க்க விரும்புவோர் பர்மிங்காம், பிரிச்டல், கார்டிப், எடின்பரோ, கிளாச்கோ, லிட்ச், லிவர்பூல், மாஞ்செச்டர், செப்பீல்டு ஆகிய நகரங்களிலுள்ள நூலகங்கள், போக்ச்டோன், (Folkestone) போன்டிபிரிடு ( Pontyprid ) சிகார்போரோ, (Scarborough) தான்டன், மதர்வெல், விசா (Wishaut) ஆகிய சிறிய நகரங்களிலுள்ள நூலகங்கள் பிர்க்கெனெட், (Birkenhead) போல்டன், அட்டர்சிபீல்டு, (Huddersfield) யார்க் ஆகிய இடங்களிலுள்ள தற்கால நூலகங்கள், பெத்னல்கிரீன், பெர்மான் டிசி, செயின்ட் மேரி, லெபோன், வெச்ட்மினிச்டர் ஆகிய இடங்களிலுள்ள நூலகங்கள், இன்னும் இவை போன்ற நகரங்களிலுள்ள நூலகங்களைப் பார்க்க வேண்டும்.