பக்கம்:முதல் பொது நூலக இயக்கம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4. சிற்றுார் நூலகம்

நூலகம் இல்லாத இடங்களிலே நூலகம் ஏற்படுத்தும் அதிகாரம் 1919 ஆம் ஆண்டில் சிற்றூராட்சி மன்றங்கட்குச் சட்டத்தின் மூலம் வழங்கப்பட்டது. தாமாகவே தேவைப்பட்ட நூலகங்களைத் தம் செலவிலே ஏற்படுத்தற்குரிய வலிவற்ற சிறிய் நகரங்கள், ஊர்கள், பட்டிகள், சிற்றூர்கள் ஆகியவற்றிலே வாழ்கின்ற மக்கள் இச்சட்டத்தின் மூலம் பின்னர் நூலகங்களை ஏற்படுத்திக் கொள்ள முடிந்தது. இங்கிலாந்திலே, சிற்றூர் நூலக இயக்கம் தனது தோற்றத்துக்கும், தொடக்ககால வளர்ச்சிக்கும், முன்னர்க் கூறிய 'கார்னிக் யுனைடட் கிங்டம் டிரச்ட்' என்ற அமைப்பின் அக்கறைக்கும், ஆர்வத்துக்கும் பெரிதும் கடமைப்பட்டுளது. மேற்குறித்த நிதியகம் தந்த பணத்தைச் சிற்றூராட்சி மன்றங்கள் நூலகத்துக்குச் செலவிடும் அதிகாரம் பெறும் முன்பு ச்டாபோர்டு சையர் என்ற இடத்திலே 1915 ல் முதன் முதலாக மாதிரிக்காக ஒரு நூலகம் தொடங்கப்பட்டது. இந்நூலகத் திட்டம் பல ஆண்டுகளாக ஆக்கம் தந்து ஊக்குவிக்கப் பட்டது. தொடக்க கால நகர நூலக வளர்ச்சியிலே நாம் கண்டது போல, சிற்றூர் நூலகங்கள் மெதுவாக வளர்கின்றன. இடத்துக்கு இடம் வளர்ச்சி வேறு-