பக்கம்:முதல் பொது நூலக இயக்கம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

பர்; அல்லது அரைநாள் வேலையாளராக இருப்பர்; அல்லது நூலகத்தாராக, நூலக அதிகாரியாக இருப்பர். இவையெலாம் உள்நிலைமையைப் பொறுத்தவையாகும்.

சிற்றூரிலுள்ள மக்கள் கடைகளில் பலசரக்கு வாங்குவதற்கும், வேடிக்கை பார்ப்பதற்கும் நகரத்துக்குச் செல்லும்பொழுது, நகரிலுள்ள நூலகத்துக்கு ஏன் செல்லல் ஆகாது? நகர நூலகங்களில் பெரும்பாலானவை தனியுரிமை யுடையன; கிளை நூலகமல்ல; டெர்பிசையர் என்ற இடத்திலுள்ளதைப் போன்று, நூலக அதிகாரிகளிடையே ஒத்துழைப்பு இருந்தாலொழிய, சிற்றூர் மக்களால் நூலகத்தை நன்கு பயன்படுத்தல் முடியாது. வட்டார நூலகமுடைய சிற்றூர்களிலே டெர்பிசையர், இலங்காசியர் என்பனவும் அடங்கும். சிற்றூர் வட்டார நூலகமானது, அருகிலுள்ள மக்களுக்குத் தொண்டு செய்வதோடு, அருகிலுள்ள ஊர் நூலகங்களுக்கு நூல் வழங்கும் நடுநாயக நிலையமாகவும் திகழ்கிறது. இத்தகைய நூலகங்களை வட்டார நூலக ஆட்சிக்குழு மேற்பார்வை யிடுகிறது.

நடுநாயக நிலையமே சிற்றூர் நூலகங்களைச் செயற்படுத்தும் திட்டத்தை ஆக்கி அளிக்கின்றது. இங்கே தான் நூல்கள் பொறுக்கல், வாங்கல், சுற்றுக்குத் தயாரித்தல், பதிதல், பிரித்து வழங்கல் எல்லாம் நடைபெறுகின்றன. பெரிய சிற்றூர்களிலே அடிக்கடி நூல் பரிமாற்றல், நடுநிலையங்களிலும், கிளேகளிலும் நூல்களைக் கூட்டல், நூல்கள் எல்லாம் சரிபார்த்தல், ஆகிய பணிகளைச செய்தல் மிகவும் முக்கியமாகும்.