பக்கம்:முதல் பொது நூலக இயக்கம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5. லண்டன் பொருட்காட்சி சாலை நூலகம்

ஆங்கிலக் குடியரசின் நாட்டு நூலகங்களில் ஒன்றான லண்டன் பொருட்காட்சி சாலை நூலகம்(London Museum Library) உலகில் பெரிய நூலகங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது. இந்த நூலகத்தில் உள்ள நூல்களை இதுவரையிலும் யாரும் எண்ணிக்கூற முடியாத அளவிற்குப் பெரியதொரு நூலகமாக இந்நூலகம் விளங்குகின்றது. ஏறத்தாழ ஐந்து மில்லியனுக்கு மேற்பட்ட நூல்கள் இந்நூலகத்தில் இருக்கலாம் என்று எண்ணப்படுகின்றது. திட்டவட்டமாக யாரும் ஒன்றும் கூற இயலவில்லை. இந்நூலகத்திலுள்ள நூல் தட்டுகளின் நீளம் மட்டும் அறுபது மைல்களாகும். முப்பது ஆண்டுகளுக்கு முன் நூல் பட்டியல் (Catalogue) தயாரிக்க ஏற்பாடுகள் நடைபெற்றன. இப்பணி 1981ஆம் ஆண்டு தொடங்கப்பெற்றது. இருபத்துமூன்று ஆண்டுகள் உருண்டோடின. இப்பணி முடிவுற்றதா? இல்லை. வல்லுநர்கள் இதுபற்றிச் சிந்தித்து "நூல் பட்டியல் முழுமை பெற வேண்டுமானல் இன்னும் 82 ஆண்டுகள் ஆகும்; அவ்வாறாயின் எங்களில் எவரும் அதனைப் பார்க்கும் வரையிலும் உயிரோடு இருக்க மாட்டோம்" என்ற முடிவிற்கு வந்தனர். எனினும், அப்பணி இன்றும் தொடர்ந்து நடந்து கொண்டுதானிருக்கின்றது. போர்க் காலங்களில் அவ்வேலை சிறிது தடைப்பட்டது. இப்பொழுது உள்ள வேகத்தில் நூல் பட்டியல் தயாரிப்பு வேலை நடைபெறுமானல், இறுதியான அல்லது