பக்கம்:முதல் பொது நூலக இயக்கம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

Room)கி.பி. 1857-ல் திறக்கப்பட்டது. இப் படிப்பகத்தைச் சுற்றிலும் நூலறைகள் உள. நூலறைகளில் எஃகுத் தட்டுக்கள் உள. அத்தட்டுக்களே தற்கால இரும்பு நூல் தட்டுக்களுக்கு அடிப்படையாகும். இவற்றிலே சுழல் தட்டுக்களும் தொங்கு தட்டுக்களும் பொருத்தப்பட்டுள்ளன. இப் படிப்பகக் கட்டடத்திலுள்ள தூபியானது உலகத்திலேயே இரண்டாவது பெரிய தூபியாகக் கருதப்படுகிறது. ரோம் நாட்டைச் சேர்ந்த பாந்தியன் ( Pantheon ) தூபியைக் காட்டிலும் இரண்டடி தான் குறைவாக உள்ளது. இப் படிப்பறையில் 450 மக்கள் அமர்ந்து படிப்பதற்கேற்ற இருக்கை வசதிகள் உள்ளன. ஏறத்தாழ 65,000 நூல்கள், இப் படிப்பகச் சுவர்களைச் சுற்றிலுமுள்ள நூலறைகளில் உள்ளன. அவற்றில் 25,000 நூல்கள் பொது நூல்களும் குறிப்பு நூல்களுமாம். இப் படிப்பகம் தவிர, கிடைத்தற்கரிய நூல்களைக் கொண்டிலங்கும் வடக்கு நாலகமும் (North Library), நாட்டுப் படங்கள், கையெழுத்துச் சுவடிகள். கீழைநாட்டு நூல்கள். அரசாங்க ஆணைகள், பத்திரங்கள் ஆகியவற்றிற்காகக் தனித்தனியாக விளங்கும் படிப்பறைகளும் இந் நூலகக் கட்டடத்தில் உள்ளன. பல இலட்சக்கணக்கான பருவ, நாள் வெளியீடுகள் லண்டன் மாநகருக்கு சில மைல்கள் தள்ளி அமைந்துள்ள கட்டடங்களில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. லண்டன் பொருட்காட்சிசாலை நூலகத்திற்கு நாள்தோறும் ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் வந்து செல்லுகின்றனர். ஓர் ஆண்டில் ஏறத்தாழ 3,000,000 நூல்கள் வாசிக்கப்படுகின்றன. இந் நூலகத்தில் ஏறத்தாழ ஒன்றேகால் இலட்சத்திற்கு மேற்பட்ட கீழை