பக்கம்:முதல் பொது நூலக இயக்கம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

55

நாட்டு நூல்களும், பதினாயிரத்திற்கு மேற்பட்ட கீழை நாட்டுக் கையெழுத்துச் சுவடிகளும், உள்ளன. ராசர் போப் பாதிரியார் கி. பி. 1799 ஆம் ஆண்டில் அளித்த நூல் தொகுதிகளும், சர். சோசப்பாங்கு என்பவர் கி.பி 1820-ல் அளித்த அறிவியல் நூல்களும், இந் நூலக வளர்ச்சிக்குப் பெரிதும் உதவின.

1842-ல் பாயாளுமன்றம் ஒரு சட்டம் செய்தது. அதாவது நூல் வெளியிட்டால் அந் நூல் வெளியான ஒரு மாதத்திற்குள் அந்த நூலின் படியொன்று, லண்டன் பொருட்காட்சிசாலை நூலகத்திற்கு இலவசமாக அனுப்ப வேண்டும் அச் சட்டம் கூறுகின்றது. இதன் காரணமாக ஆயிரக்கணக்கான நூல்களும், பருவ வெளியீடுகளும் நூலகத்தில் வந்து குவிந்த வண்ணமாக இருக்கின்றன.இதுவரையிலும் வந்து சேர்ந்த நூல்களின்,செய்யி இதழ்கள ஆகியவற்றின் நிறை 2,000 டன் தான்று கணக்கிடப்பட்டுள்ளது. இந் நூலகத்தை வேறொரு இடத்திற்க்கும் மாற்ற வேண்டுமானால் இரு நூறு லாரிகள் ஆறு வாரங்கள் ஓடல் வேண்டும். இருபதாண்டுகட்கு முன்னர் நூலகத்தின் செய்தி இதழ்ப் பகுதி லண்டனிலேயே உள்ள கோலின்டேல் (Colindale) என்ய ஓர் இடதத்திற்கு மாற்றப்பட்டது. அவ்வாறு மாற்றுவதற்காக 15 லாரிகள் ஆறு வாரங்கள் ஓடின. அப்பொழுதிருக்க தொகுதிகளின் எண்ணிக்கை 3,50,000 ஆகும். இன்று 1,00,000க்கு மேற்பட்ட தொகுதிகள் உள்ளன.

காந்தி அடிகள், லெனின், சர் ச்டாப்போர்டுகிரிப்ச், சர்ச்சில், காரல்மார்க்ச் முதலிய அறிஞர்கள் இந் நூலகத்தைப் பெரிதும் பயன்படுத்தினர்.