பக்கம்:முத்தமிழ் மதுரை.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலியூர்க் கேசிகன்

23


கோயிலன்றிப் பிற கோயில்களும் மதுரை நகரில் இருந்தன. எனினும், இந்தப் பகுதியிற் சிலம்பு இவ் விரண்டையும் இணைத்துக் கூறுவதன் காரணம். அகற்சியாலும் பெரிதான தன்மையினாலும், இவ்விரண்டும் இணையொத்து விளங்கியதினாலேயே என்று கூறலாம்.

நம்பியின் திருவிளையாடல்

சிவபிரான் போற்றுவதற்கு உரிய பெருங் கடவுளாக மதுரைப்பேரூரில் கோயில் கொண்டிருந்தனர் என்பது மட்டுமன்று; அவர், பாண்டியரின் இன்பதுன்ப வாழ்வியல்களிலும் பங்கெடுத்துக் கொண்டிருந்தனர் என்று புராணங்கள் கூறுகின்றன.

பாண்டியனின் மகளை மணந்து பாண்டியரின் உறவுத்தெய்வமாக விளங்கியவர் சிவபெருமான் ஆவார். அந்த உறவினாலோ, அன்றித் தாம் கொண்ட கருணைப் பெருக்கினாலோ, பற்பல வியத்தகு செயல்களை மதுரையிலே அவர் நிகழ்த்தியிருக்கின்றார். இப்படிச் சிவபெருமான் நிகழ்த்திய பல்வேறு திருவிளையாடல்களையும் பற்றிக் கூறும் நூல்கள் சிலவாகும். அவற்றினைப் பற்றியும் நாம் அறிந்து கொள்ளுவோம்.

‘திருவாலவாயுடையார் திருவிளையாடல்’ என்ற பெயரோடு, செய்யுள் நடையிலே ஒரு நூல் உள்ளது. மதுரைச் சொக்கரின் திருவிளையாடல்களைக் கூறும் நூற்களுள், காலத்தாற் பழைமையானது இதுவே. ‘செல்லிநகர்ப்பெரும்பற்றப் புலியூர்நம்பி’ என்னும் புலவர் பெருமான் இதனை இயற்றியவர். ‘உத்தர மகா புராணம்’ என்னும் வடமொழி நூலினை மொழிபெயர்த்துச் செய்யப்பட்டது இது என்பார்கள். ‘பழைய திருவிளையாடல்’ எனவும், வேம்பத் தூராரின் திருவிளையாடல்’ எனவும், இதனைச் சான்றோர் போற்றுவார்கள்.

கடம்பவன புராணம்

தொண்டை நன்னாட்டின் ‘இலம்பூர்’ என்னும் ஊரிலே, ‘வீமநாத பண்டிதர்’ என்னும் பெயருடைய புலவர் பெருமான் ஒருவர் இருந்தனர். இவர், ‘கடம்பவன புராணம்’ என்னும் பெயரால் செய்யுள் நடையிலே ஒரு நூலினைச் செய்தார். இதுவும், திருவிளையாடற் கதைகளைக் கூறுவதேயாகும். இதுவும், வடமொழி நூலினைத் தழுவிச் செய்யப்பட்டதே ஆகும்.