பக்கம்:முத்தமிழ் மதுரை.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலியூர்க் கேசிகன்

25


இப்படியாக அமைந்த நிலப்பகுதிகள் ஐந்தினும் பற்பல நகரங்கள் விளங்கின. எனினும், அவற்றுள் பயன்மிக்க நகரமாக விளங்கியது பாண்டியரின் மதுரை நகரமே யாகும்.

மிகவும் உயரமான அழகிய கோபுரங்கள் மதுரையில் இருக்கின்றன. சிவபிரான் திருநடனம் செய்கின்ற ‘வெள்ளியம்பலம்’ அங்கே இருக்கிறது. கயிலை மலையினையும் ‘சக்கரவாள கிரி’ யினையும் ஒப்பாகக் கூறக்கூடிய பெரியதான கோட்டை மதிலும் நகரைச் சூழ்ந்து அமைந்திருக்கிறது. அந்தக் கோட்டைமதிலைச் சூழ அமைந்து விளங்கும் அகழியோ மிகவும் ஆழமானது. ‘கடல் போன்று பரந்து விளங்குவது அந்த அகழி’ எனலாம்.

மதுரைமா நகரினை நான்கு தெய்வங்கள் காத்து வருகின்றன. கன்னி, கரியமால், காளி, திருவால வாய்த் தருமமூர்த்தி என்பன அவை.

சக்தி பிறந்த நகரம்

சிவசக்தியே மலையத்துவச பாண்டியனின் திருமகளாகத் தோன்றினாள். ‘தடாதகை’ என்ற பெயருடன் வளர்ந்தும் வந்தாள். சிவபெருமானைத் திருமணமும் செய்துகொண்டாள்.

பதஞ்சலி தொழுது போற்றினார்

பதஞ்சலி முனிவர் வடமொழியிற் சிறந்த பல நூற்களைச் செய்தவர். இவருடைய யோக சூத்திரத்தினை மிகவும் சிறத்த யோக தத்துவநூல் என்பார்கள். இவர், சிவபிரானின் திருநடனத்தைக் காண விரும்பினார். இவர் விருப்பப்படியே, சிவபிரான் வெள்ளியம்பலத்திலே திருக்கூத்து இயற்றினார். கண்குளிரக்கண்டு மனம் உவந்து போற்றித் துதித்தார் பதஞ்சலியார். அன்று அவர் கூறியதாக வழங்கிவரும் வடமொழிச் சுலோகத்தினை, இந் நாளினும் பலர் பாடிப் பெருமானைத் துதிக்கின்றார்கள்.

வையையின் பிறப்பு

சொக்கர் திருமணத்திற்காக வருபவர்களுக்கு உணவு அளிக்க ஏராளமான சோற்றுக் குவியல்கள் ஆக்கப்பட்டன. திருமணம் முடிந்து, வந்தவர்கள் உண்டுபோன பின்னரும், மலைமலையாகச் சோறு எஞ்சிவிட்டது. அதனை உண்டு தீர்க்கக் குண்டோதரனை அழைத்தார் சிவபிரான்.

அவனும் அனைத்தையும் உண்டுவிட்டான். நீர் வேட்கை மிகுதியாக எழவே, அதனைப் போக்கியருளுமாறு சிவபிரானை