பக்கம்:முத்தமிழ் மதுரை.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலியூர்க் கேசிகன்

27


‘சுந்தரமாறன்’ எனவும், ‘முதுகுடுமிப் பெருவழுதி’ எனவும் வழங்கப்படுகிறான்.

நான்மாடக் கூடல்

ஒருசமயம், வருணன் மதுரை நகரை அழிக்கக் கருதினான். முதற்கண் கடலை ஏவீனான். அப்போது, சிவபெருமான், புட்கலா வருத்தம் முதலிய நான்கு மேகங்களை அழைத்துக் கடல்நீரைக் குடித்து விடுமாறு பணித்தார். அவையும் அவ்வாறே குடித்துவிட்டன.

அதன்பின், வருணன் பெருமழையினைப் பெய்யுமாறு செய்தான். நான்கு மேகங்களும் நான்கு மாடங்களாகி மதுரையைக் காத்தன. அதனால், ‘நான்மாடக் கூடல்’ என்ற பெயரும் இம் மதுரைக்கு ஏற்பட்டது.

சங்கப் பலகை

கடைச்சங்கம் இருந்து மதுரையிலே தமிழாய்ந்த செய்தியினை இறையனாரகப்பொருள் முதலிய நூல்கள் கூறுகின்றன. ஆனால், சிவபிரானே கடைச்சங்கத்திற்கு உரிய சங்கப்பலகையினை அருளியதாகத் திருவிளையாடல் கூறுகிறது.

‘அதனை மண்டபத்து நடுவே வைத்து முதற்கண் நக்கீரர் அதன்கண் இருந்தனர்; அது மீண்டும் வளரக் கபிலர் அமர்ந்தனர்; அது பின்னரும் வளரப் பரணர் அமர்ந்தனர்; இவர்கள் மூவரும் அமர்ந்து பிற புலவர்களுடன் கூடித் தமிழாய்ந்து தொகுத்தனர்’ என்கிறது திருவிளையாடல்.

இறையனார் களவியல்

இந்த அகநூலைச் சிவபெருமானே ‘பேராலவாயர்’ என்ற புலவராக வந்து அருளினார் என்பர். இந்நூற்கு உரைகண்டவர் பலர். அவ்வுரைகளைக் கேட்டு நக்கீரனாரின் உரையினைச் சிறப்புடையதெனக் காட்டியவர், முருகனின் அமிசமாக இருந்த உப்பூரிகுடிகிழார் மகனார் உருத்திரசன்மராவர் என்பர்.

தருமியின் கதை

தருமிக்குப் பொற்கிழியினை உதவும் பொருட்டாகச் சிவபிரானே ஒரு செய்யுளைச் செய்து அளித்தனர். அதன் கண் பொருட்குற்றம் உள்ளதெனக் கூறி நக்கீரனார் அதனை ஏற்க மறுத்தனர். சிவபிரான் நெற்றிகண்ணைக் காட்டிய போதும், ‘குற்றம் குற்றமே’ என உரைத்த நக்கீரரைத் தம் குற்றத்தை