பக்கம்:முத்தமிழ் மதுரை.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலியூர்க் கேசிகன்

35


வடிம்பலம்பநின்ற பாண்டியன். அவன், தன்மீதும் வடிவேல் எறிந்த பெரும் பகையினைப் பொறுக்காது, கடலானது பொங்கி எழுந்தது. பஃறுளி யாற்றுடனே, பல மலையடுக்குகளை உடையதான குமரித்தொடரினையும், தன்னகத்தே அது விழுங்கிக் கொண்டது.

“இழந்த இடத்திற்கு ஈடாகப் புதிதாக எழுந்த வடதிசைக் கங்கையையும் இமயத்தையும் கைக்கொண்டு, தென்திசை முழுவதனையும் ஒரு குடைக்கீழ் ஆண்டவன்” அத் தென்னவன் ஆவான்.

திங்கட் குலத்தவர்

“திங்கட் செல்வனின் திருக்குலத்தவர் பாண்டியர். அவர்களின் குடிவிளக்கம் அடையும்படியாக, ஆயிரங்கண்களையுடைய தேவர் கோமான் பூட்டிய திறம்விளங்கும் ஆரத்தினைத் தன் ஒளிபொலிந்த மார்பிலே பூண்டவன் பாண்டியன்.

மேகங்களை வென்றவன்

“எம் முதல்வனின் சென்னியிலேயுள்ள வளையை உடைத்தோன் இவன்’ என்று, மேகங்கள் பாண்டியனுடைய நாட்டிலே மழை பெய்யாது அகன்றன. தன் நாட்டிலே தப்பாத விளைபொருள்களும், பெருவளமும் சுரக்குமாறு, அம் மேகங்களைச் சிறைப்படுத்தி, மழை பெய்விக்கச் செய்து ஆண்டவன் பாண்டியன்.”

பாண்டிய மன்னனின் சிறப்பினை மாங்காட்டு மறையவனின் வாயிலாக மேற்கண்டவாறு கூறுகிறது சிலம்பு.

பாணர் உரைத்தனர்

இதற்குப் பின்னர், மாதவியிடமிருந்து தன்பால் வந்த தூதனாகிய கோசிகனைக் கோவலன் கண்டான். தன் தாய் தந்தையரின் துன்பத்தைப் போக்குமாறு சொல்லி அவனை வழியனுப்பிவிட்டுப் பாணரோடு கூடி ஆடிப்பாடி மகிழ்ந்தான். அவர்களிடத்தே, மதுரையின் தொலைவைப் பற்றிக் கேட்கவும், அவர்கள், கோவலனுக்கு இப்படி உரைக்கின்றனர்:

மதுரைத் தென்றல்

“வயிரம் பாய்ந்த அகில், சந்தனம், மணங்கமழும் குங்குமம், புழுகுக் குழம்பு ஆகியவற்றால் செய்த நன்மை பெருகச் செய்யும் சாந்தினையும், கத்தூரிச் சாந்தினையும் கலந்த கொழுஞ்