பக்கம்:முத்தமிழ் மதுரை.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலியூர்க் கேசிகன்

41



அதனையடுத்துப் பண்ணும் கிளியும் பழித்த இனிய சொல்லினம், அறுபத்துநான்கு கலைஞானமும் உணர்ந்தோருமான கணிகையர் மரபினர் வாழ்கின்ற இரு பெரிய வீதிகளையும் கண்டு மகிழ்ந்தவனாக, அவன் மேலும் செல்லுகின்றான்.

அங்காடிவீதி

அங்காடி வீதியிலே செல்லும் கோவலன், அரசரும் பெறுவதற்கு ஆசை கொள்ளும் செல்வவளம் மிகுந்த அதனைக் கண்டு வியப்டைகின்றான். மூடு வண்டிகள், பாண்டில் என்னும் வண்டிகள், அழகிய தேர்மொட்டுகள், உடல் புகுந்து கொள்ளுமாறு அமைந்த கவசங்கள், தோட்டிகள், தோலாற் செய்த கைத்தாளங்கள், அரைப் பட்டிகைகள், வளைதடிகள், வெண்சாமரைகள், பன்றிமுகக் கடகுகள், கிடுகின் படங்கள், கானப் படங்கள், முத்துப் பதித்த குத்துக் கோல்கள் ஆகிய பலவும் அங்கே திரள்திரளாகக் குவிந்து கிடக்கின்றன.

செம்பாலும் வெண்கலத்தாலும செய்தனவும், கயிற்றாற் பின்னியனவும், மாலைபோலப் புனைந்தனவும், ஈர்வாள் கொண்டு ஈர்ந்தனவும், தந்தத்தால் கடைந்து செய்யப்பட்டனவும் ஆகிய பற்பல பொருள்களும் அங்கே விளங்குகின்றன.

புகைப்பதற்காவனவும், சாந்திற்காவனவும், பூவிற் புனைந்தனவும், இன்ன பிறவும் காணப்பெறுகின்றன. இவை எல்லாம் வகைவகையாக அங்காடி வீதியிற் குவிந்து கிடந்தன.

இரத்தினக் கடைவீதி

அங்காடி வீதியைக் கடந்து இரத்தினக் கடைத்தெருவிலே கோவலன் நுழைகின்றான். அங்கே விளங்கிய நவமணிகளின் வகைகளையும் பிறவற்றையும் கண்டு வியப்புற்றவனாக, அவன் மேலே செல்லுகின்றான்.

பொன்கடை வீதி

சாதரூபம், கிளிச்சிறை, ஆடகம், சாம்பூநதம் என்னும் நால்வகைப் பொன்னினும் வணிகம் புரிவோர் இருந்த வீதிக்குக் கோவலன் அதன்பின் வருகின்றான். அங்கே அறிவிக்கும் சிறுசிறு கொடிகளுடனே விளங்கும் அளவற்ற பொற்குவியல்களைக் காணுகின்றான்.

அறுவை வீதி

நூலினாலும், மயிரினாலும், நுழைநூல் பட்டினாலும் நெய்யப்பட்ட நல்ல துணிமடிகள், தம் இனவகை தெரியாதபடி