பக்கம்:முத்தமிழ் மதுரை.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

முத்தமிழ் மதுரை


வேளையில், நாள் தவறாமல், அவனே சென்று, அவ்வீட்டை விழிப்பாகக் கண் காணித்து வருவானானான்.

ஒருநாள் இரவு, கீரந்தையின் வீட்டினைக் கவனித்த பாண்டியன் திடுக்கிட்டான். உள்ளேயிருந்து ஓர் ஆண்குரல் கேட்டது. அவன் மனம் ஐயுற்றது. அக் குரலுக்கு உரியவர். யாரென்றறியும் கருத்துடனே கதவைத் தட்டினான். உள்ளேயிருந்த கீரந்தை அதனைக் கேட்டுக் கொதிப்படைந்தான்.

அவன் மனைவியோ, ‘அரசனுடைய காவலல்லாது வேறு எத்தகைய காவலும் பழியற்றதாக இராது என்று கூறி, அன்று என்னைத் தனியே இருத்திச் சென்றீர்களே? அந்தக் காவல் என்பதொன்றும் இருந்தால், இன்று அஃது என்னை இவ்விடரினின்றும் காப்பாற்றாதோ?’ என்றனள்.

அவளுடைய சொற்கள் பழுக்கக் காய்ச்சிய ஆணியினைச் செவியுள்ளே புகுத்தினாற்போன்ற வேதனையினைத் தரப் பாண்டியன் உள்ளம் நொந்தவனாகி நின்றான். அத்தெருவின் எல்லா வீடுகளின் கதவுகளையும் தட்டியவனாக அரண்மனைக்குத் திரும்பினான்.

மறுநாட் காலை, அத்தெருவினர் வந்து, அரசனின் அவையில் முறையிட்டனர். குற்றவாளியைத் தவறாது ஒறுக்கவேண்டும் என்றனர். அப்போது, அந்தப் பாண்டியன், அவர்கள் முன்னர்த் தன் கையினையே வெட்டினான். அது, அந்த அளவில் பொற்கையாகவும் ஆயிற்று. அவனது அறத்தின் செப்பத்தை ஆன்றோர் போற்றினர். ‘பொற்கைப் பாண்டியன்’ என்ற புகழ்ப் பெயரும், அன்றிலிருந்து அவனுடைய தாயிற்று.

வார்த்திகன் கதை

திருத்தங்கால் என்ற ஊரிலே ‘வார்த்திகன்’ என்ற பெயருடையவன் ஒருவன் இருந்தான். அவனுடைய சிறு மகன் மிகவும் கூர்த்த அறிவுள்ளவன்.

ஒரு சமயம், ‘பராசரன்’ என்பவன் சேரனது கொடைச் சிறப்பைக் கேள்வியுற்றான். அவனை நாடிச் சென்று ஏராளமான பரிசில்களைப் பெற்றவனாகத் திரும்பிக் கொண்டிருந்தான். வழியிடையில் இருந்த திருத்தங்காலிலே அவன் தங்கினான்.

சிறுவர்களின் அறிவை அறியுமாறு அவன் வினவ, வார்த்திகனின் புதல்வன், அவனோடு ஒத்த முறையிலே சந்தம் பிறழாது வேதத்தை ஓதினான். பராசரன் தன் மகிழ்ச்சிக்கு