பக்கம்:முத்தமிழ் மதுரை.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலியூர்க் கேசிகன்

49


அடையாளமாக, அச்சிறுவனுக்குப் பல பரிசில்களை வழங்கிவிட்டுச் சென்றான்.

அரசனின் ஏவலாளர் அந்த அணிகளைக் கண்டு ஐயுற்றனர். ‘வார்த்திகன் திருடியிருப்பான்’ என்று கருதி அவனைச் சிறையிலிட்டனர். அறம் பிறழ்ந்த அச் செயலினாலே கொற்றவையின் கோயில் கதவம் தானாகவே அடைபட்டது.

பாண்டியன் அதனை அறிந்து பெரிதும் கலங்கினான். வார்த்திகனை விடுதலைசெய்து அவனிடம் மன்னிப்பும் கேட்டான். அவனுக்கு இரண்டு ஊர்களைத் தானமாகத் தந்தும் போகவிட்டான். அப்போது, கலையமர் செல்வியின் கோயிற் கதவமும் தானாகவே திறந்தது.

கண்ணகியின் கதை

கோவலன், தன் கற்புச்செல்வியான கண்ணகியுடன் ஆய்ச்சியர் சேரியிலே வந்து அடைக்கலமாக இருக்கின்றான். தன் மனைவியான அவள், தனக்கெனச் சமைத்த உணவினை உண்டு, தன் திட்டப்படி அவன் காற்சிலம்புகளுள் ஒன்றனை விற்கக் கருதியவனாக, மதுரை வீதியினுள்ளே காலையிற் சென்று கொண்டிருக்கின்றான்.

அவனைப் பொற்கொல்லன் ஒருவன் எதிர்ப்படுகின்றான். அவனிடம், கோவலன் தன் சிலம்பினை விற்பதுபற்றி வினவ, அவனும், ‘யான் களவாடிக் கொண்ட அரசியின் சிலம்புபற்றிய செய்தி இவனுக்கும் வந்து எட்டிவிடாமுன்னம், மன்னனுக்கு இவனைக் கள்வனாகக் காட்டிக் கொல்வித்து, என்னைக் காத்துச் கொள்வேன்’ என்று எண்ணினான். ‘அரசமாதேவிக்கு அல்லாமல் பிறருக்கு இது பொருத்தமானதன்று. முற்பட யான் சென்று அரசனிடத்தே சொல்லி வருமளவும் இவ்விடத்தே இருப்பாயாக’ என்று கோவலனுக்குச் சொல்லிவிட்டு, அப்பொற்கொல்லன், அரண்மனைக்கு விரைந்தான்.

காவலனிடம், கள்வனைக் கண்டதாக உரைத்து நின்றான். காதலனும், ‘என் தேவியின் சிலம்பு அந்தக் கள்வனின் கையது ஆயினால், அவனைக் கொன்று விட்டு அதனை இங்குக் கொணர்க’ என்ற ஆணையுடன், தன் ஏவலரை அவனோடு அனுப்பினான்.

அவர்கள் கோவலனைக் கண்டதும், ‘அவன் கள்வனாயிருக்க வியலாது’ என்று ஐயுற்றனர். பொற்கொல்லன், அவனைக் கள்வனென அவர்கள் கருதுமாறு பலவும்