பக்கம்:முத்தம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

          10

மகத்தான அன்பு-ஒன்று உண்டு. அழகு,அமைதி-,அறிவு-,அடக்கம்-, இவை அதன் நிறைழவுகள்.அத்தகைய உண்மையான-தெய்வீகமான -காதல் முன்னிலையில் வெறித்தனமும் புலன் அடக்கமின்மையும் எட்டிப் பார்க்கவே கூடாது. காதலன் காதலிகளிடையே இவை தலை காட்டவே கூடாது. உண்மையான, உயர்ந்த, காதல் எனில் உடலுறவுக்குத்தான் என்ன அவசியம்? ஆணும் பெண்ணும் நட்பு முறை கொண்டாடட்டும். அவர்களிடம் அன்பு பூக்கட்டும். ஆனால், பெற்றோர் மக்களிடம் காட்டுவது போன்ற களங்கமற்ற அன்பாக இருக்கட்டும்'.

 பிளாட்டோ கூறி யிருப்பது நியாயமானது; புனிதமான கருத்து: உயர்ந்த லட்சியம் என்று நம்பினாள் பத்மா. அம் முறையை ஏன் பின்பற்றக் கூடாது? ஒரு சிலராவது அழகுக்காக, கலை உயர் வுக்காக, மனநலனுக்காக, உடல் நன்மைக்காக, ஆன்ம எழிலுக்காக இந்த விதமான காதலை வளர்த்துவந்தால், மனித சமுதாயம் மிருக நிலையிலிருந்து உயர்ந்துவிட வழி பிறக்காமலா போகும்? வாழ்க்கை கவலைகளை வளர்க்கும் பாழ்ப் பண்ணையாகவா இருக்கும்! ஆனந்தம் பூத்துக் குலுங்கும் இனிய சோலையாகத் திகழாதா என்ன! இப்படி நினைத்தாள் அழகி பத்மா.
 தன் தோழிகளிடம் தனது அபிப்பிராயத்தை அறிவித்தபோது அவர்கள் கைகொட்டிச் சிரித்தார்கள். 'அபத்தமடி பத்மா, அத்தனையும் அபத்தம்.... சொத்தைக் கருத்துகளடி,தோழி! ஊத்துக்கு நிற்காது...எழுத்திலும் பேச்சிலும் இனியது நன்று. ஆனால் வாழ்க்கைக்குக் சுட்டி வராது...' என்று கொக்கலித்தார்கள்.
 போக்கிரிப் பெண் புஷ்பா ஒரு போடு போட்டாள். பிளாட்டோ

போதை மயக்கிலே உகுத்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முத்தம்.pdf/12&oldid=1370410" இலிருந்து மீள்விக்கப்பட்டது