பக்கம்:முத்தம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

ஆணோடு பெண்ணும் கூடிடில் தனியே ஆபாச நினைவுகள் ஏனோ பிறக்கணும் ? அண்ணன் பிளாட்டோ சும்மவா சொன்னான் ? கண்ணே மணியே ! காண்போம் பேசுவோம் மண்ணும் விண்ணும் போலவே நாமும் விலகியே இருப்போம்! அதுவே காதல்:

இப்படி ஏதாவது பாடுவியா! கவிதைன்னாலும் ஸிம்ப்ளா, ஜோரா, சுவையா........'

கவிராயர் சீறிச் சினுங்கியபடி போனார்.

பத்மாவின் பாலிஸிப் பிரகடனம் அனைவருக்கும் ஆரவாரிப்புக்குரிய ஆனந்தமே அளித்தது. ஒன்றிரண்டு பேர்வழிகள் உற்சாகம் மீறியவர்களாய்,' உங்கள் புதிய காதல் தத்துவத்தின் படி, உங்களோடு காதல் சம்பாஷணை செய்யவும், கடிதப் போக்கு வரத்து வைத்துக் கொள்ளவும் விரும்புகிறேன் அதற்கு அத்தியாவசியமான முதல் பாடத்தை அறிவிக்கும்படி வேண்டுகிறேன்' என்று கடிதம் கூட எழுதி அனுப்பி விட்டார்கள்.

பத்மாவுக்கு மனக் கஷ்டமாகத் தான் இருந்தது. 'மடையர்கள்! மிருகங்கள்!' என்று ஏசவேண்டும் என்கிற துடிப்பு பிறந்தது. அவளது பண்பு மிகுந்த உள்ளம் 'போகிறார்கள்! என்ன இருந்தா லும் இவர்கள் மனித ஜந்துக்களிடையே வாழ்ந்து திரியும் மனிதப் பிராணிகள் தானே! அதி மனிதர்கள் ஆகிவிடவில்லை யல்லவா? இவர்களிடம் இதைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முத்தம்.pdf/16&oldid=1496059" இலிருந்து மீள்விக்கப்பட்டது