பக்கம்:முத்தம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

'தப்பு ஒண்ணுமில்லை மிஸ்டர் ஆனால் ஒரு சின்னச் சந்தேகம்'

'சின்னச் சந்தேகம் தானே? சொல்லுமேன் ஐயா!' என்று ஒரு கனைப்பு எழும்.

'ஆனா பெரிய பிரச்னை!'

'பயமுறுத்தாமல் விஷயத்துக்கு வாருங்காணும் அளக்கிறீரே சும்மா....'

'விஷயம் என்னவென்றால், பிளட்டானிக் லவ் என்கிறார்களே, அந்த உன்னதக் காதல் முறையை-அது தான் உங்களுக்குத் தெரியுமே! உடல் உறவு தவிர்க்கப்பட்ட வெறும் அன்புப் பரிவர்த்தனை-எல்லோரும் கையாள்வதானால் உலகம் என்னாகும்? உதாரணமாக, இந்தத் தலைமுறை அதை அப்படியே அனுஷ்டிப்பதானால்......"

'நடைமுறைக்கு ஒத்துவராத விஷயம் அது.'

'அட, பேச்சுக்கு வைத்துக் கொள்வோமே! அப்படியே வைராக்யத்தோடு அமுலுக்குக்கொண்டு வந்து விட்டால், அப்புறம் புதிய தலைமுறைகள் பிறக்கவே வழிகிடையாதே! மனிதவர்க்கம் நசித்துப் போக வேண்டியது தானே. அப்புறம் உலகம் உயர் வழியிலே உருப்படுவது ஏது? இதை பிளாட்டோவோ பத்மாவோ ஏன் எண்ணிப்பார்க்க வில்லை?' என்று கேட்டார் மிஸ்டர் சந்தேகம்.

'பெரிய பிரச்னை தான் ஐயா! ரொம்பப் பெரிய விஷயம் தான். பத்மாவிடம் கேட்க வேண்டிய கேள்வி இது' என்றார் ஒருவர்.

'பத்மா சும்மா ஆர்வத்திலே பேசுகிறாள். அவள் என்ன கிழவியா! பிஞ்சிலே வெம்பி விட்டவளா? குளுகுளுன்னு மல்கோவா மாம்பழம் மாதிரி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முத்தம்.pdf/18&oldid=1496219" இலிருந்து மீள்விக்கப்பட்டது