பக்கம்:முத்தம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

19

வோரை நின்று திரும்பிக் கண்ணெறியத் தூண்டும் காந்தம். அவள் உலவும் கவிதை.

அவள் சொன்னாள், 'கல்யாணம் செய்யமாட்டேன். கல்யாணமின்றித் தனி வாழ்வு வாழலாம். வாழ்விலே குளுமைகாண, கலை நயம் தெரிக்க அன்பன் ஒருவன் தேர்ந்து அவனுடன் புனித அன்பு-களங்கத்துக்கு இடமில்லாத நட்பு-முறையிலே பழகி வாழலாம்; வாழ்ந்து காட்டுவேன்' என்று.

'பச்சைக் குழந்தை. உலகம் என்ன வென்று தெரியாது. வயசாக ஆகத் தானே புரிந்துகொள்வாள்' என்றார்கள் பலர்.

'உலகம் சரியான பாதையிலே போகவில்லை, வாழ்ந்து வழிகாட்டுவேன்' என்றாள் பத்மா.

'என்னவோ பார்க்கலாமே. அவளெங்கே போகப் போறா! நாம் தான் எங்கே போய்விடப் போறோம்!' என்று நினைத்தார்கள் அவளுடன் பழகியவர்கள்.

தான் பலரது கவனத்துக்கும் இலக்காகிவிட்ட முக்கியப் புள்ளி என்ற நினைவு பத்மாவுக்கு மகிழ்வையும் கர்வத்தையும் கொடுத்தது. இந்தப் பேச்சுக்கே இவ்விதம் என்றால், தனிமுறையிலே வாழ்ந்து காட்டிவிட்டாலோ!...அம்மா! எல்லாரும் அசந்து போகமாட்டார்களா அசத்து! பத்மா, அவ பெரிய ஆளு. கைகாரியடி என்று தானே புஷ்பாவும் தேவகியும் அவளும் இவளும் கருதுவர். அப்பொழுதெல்லாம் அவர்கள் முகத்தைப் பார்க்க வேணும். எனக்குச் சிரிப்பாகப் பொங்கி வரும்.....

இதை எண்ணும் போதே அவள் சிரித்தாள். தோழிகளின் முகங்களை கற்பனை செய்து பார்த்து அதிகம் சிரித்தாள். தானாகவே சிரித்துக்கொண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முத்தம்.pdf/21&oldid=1496118" இலிருந்து மீள்விக்கப்பட்டது