பக்கம்:முத்தம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

அவளுக்கு ஏற்படும் ஏமாற்றமும், அதனால் பிறக்கும் சிடுசிடுப்பும்' பிறரிடம் சீறிவிழும் பண்பும் எதிர் குணங்கள் என அவளால் அறியமுடிய வில்லை. ஒரு நாள் வராமல் மறுநாள் வந்து சேர்ந்தால் அவளுக்கு உண்டாகும் உணர்ச்சிப் புளகிதத்துக்கு, பேரானந்தத்துக்கு, என்ன பொருள் என்று விளக்கிக் கொள்ளும் சக்தியில்லை. பகலிலும் இரவிலும், கனவிலும், நனவிலும், தான் ரகுராமனின் நினைவாகவே மாறி வருவதன் வயணமென்ன என்பதும் அவளுக்குத் தெரியாது.

மொத்தத்தில் தான் அதிசயப்பிறவி யல்ல, அதீதமான குணங்கள் பெற்ற லட்சியப் பெண் அல்ல; சாதாரணமான பெண் தான் என்பதை உணர்த்த எல்லாச்சம்பவங்களும் பயன் பட்டாலும், பத்மா அவற்றினால் உண்மையை உணரவில்லை.

பத்மாவின் தாத்தா அவர்களை நன்றாகக் கவனித்து வந்தார். எல்லாரையும் பற்றுகிற 'வியாதி' அவளையும் சரியாகப் பிடித்துக்கொண்டது என்பதில் அவருக்கு வெற்றி மகிழ்ச்சி.

9

வாழ்க்கை சாரமற்றது; வரண்ட பாலை அது என்று எண்ணி வாழ்ந்த ரகுராமனுக்கு வாழ்வு பசுமையானதாக முடியும் ; தென்றல் தவழும் சோலையாகவும், குளிர் பூம்புனல் சுனையாகவும் மாற முடியும் என நிரூபித்து வந்தது பத்மாவின் நட்பும் அவள் காட்டிவந்த அன்பும்.

முதலில் சாதாரண அறிமுகம் என நினைத்தான். பிறகு இனிய நட்பு என எண்ணினான். பின் ஒத்த மனமுடைய, உயர்ந்த நோக்குடைய, இருவரின் ஆத்மீக அன்பு என்று நம்பினான். என்றாலும் காலப்போக்கிலே அறிவையும் ஆத்மீக நினைவையும் பின்னுக்கு நிறுத்தி உணர்வு வெற்றி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முத்தம்.pdf/38&oldid=1496617" இலிருந்து மீள்விக்கப்பட்டது