பக்கம்:முத்தம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

 சாத்தியம்?-இந்த எண்ணம் எழவும், அவளை, அவள் செயல்களை நன்றாக கவனித்தான்.

பத்மாவின் பேச்சுக்கும், போக்குக்கும் பல மாறுபாடுகள் ஏற்பட்டுள்ளன ; உணர்ச்சியின் லீலைகள்தான் அவை என்பதை அவன் புரிந்து கொண்டான். அவள் தோல்வி-அவனுடைய தோல்வியும்தான் - அவனுக்கு சந்தோஷமே தந்தது. 'சரி நடக்கிறபடி நடக்கட்டும்!' என்று விட்டு விட்டான். ஆகவே, அவனும் இயல்பான ரீதியிலே விளையவேண்டிய முடிவை எதிர்நோக்கி யிருந்தான்.

10

அந்த நாளும் வந்தது! அன்று பெளர்ணமி. சில மோகன சக்தியோடு பூமியை எழில்மிகு வெள்ளிமயப் பனிநிலமாய் மாற்றிக்கொண்டிருந்தது. நிலவின் காந்தம் கடல் அலைகளை மட்டுமல்ல. எண்ணற்ற மனிதரின் உணர்ச்சிகளிலும் ஏறலை இறங்கு அலைகள் காட்டிக் கிளுகிளுப்பு உண்டாக்கியது.

பத்மாவும் ரகுராமனும் சந்திரிகையின் மோகனத்தில் சொக்கி, தம்மை மறந்த லயத்தில் நீந்த முயன்றனர். சூழ்நிலை அழகும், குளிர் இரவும், தனிமையும், நிலவும் அவனையும் அவளையும் உணர்ச்சிப் பரவச மிகுதி நிலைக்கு உந்திக்கொண்டிருந்தன. அவர்கள் பேச்சு இயல்பாக இலக்கியக் காதல் உலகில் வட்டமிட்டு வந்தது. ரோமியோவும், ஜுலியட்டும், லைலாவும் மஜ்னுவும் இன்னும் பல காவிய நாயக நாயகிகளும் அவர்கள் மனத்திரையில் புகையாகப் படர்ந்து, பேச்சுப் பரப்பில் நிழலாக ஆடித் திரிந்தனர். முழுநிலா தன் வேலையை ஒழுங்காகச் செய்துகொண்டிருந்தது.

பத்மாவுக்கு உள்ளமும் உடலும் என்னவோ போல் வந்தது. தேகம் கதகதத்துக்கொண்டிருந்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முத்தம்.pdf/40&oldid=1496594" இலிருந்து மீள்விக்கப்பட்டது