பக்கம்:முத்துக் குளிப்பு.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95

மாட்சிமை தங்கிய மன்னர் பிரானின் அருளுக்கு, இலக்கான தளபதி ஒருவன் - அழகுத் தோற்றம் கொண்ட கோமகன்-தகத்தகாய எதிர்காலத்தை. நிச்சய வெகுமதியாக எதிர் நோக்கி நின்றவன்-சக்கிர வர்த்தினியின் பரிவாரத்தைச் சேர்ந்த வசீகரக் கோம ளாங்கி ஒருத்தியை அடுத்த மாதத்தில் மணம் புரிந்து கொள்ளவிருந்த பாக்கியசாலி...

திடீரென்று இராணுவ பதவியை உதறி எறிந்தான். நிச்சயிக்கப்பட்டிருந்த கல்யாணத்தை தேவையில்லே என முறித்தான். தனக்கிருந்த சொத்து பூராவையும் தன் தங்கை பேருக்கு மாற்றினன். சாமியார் ஆகிவிடு வதற்காக ஒரு மடத்தை நோக்கிப் போய்விட்டான்.

சாதாரண மக்கள் அனைவருக்கும் இது பரபரப்பூட் டும் நிகழ்ச்சிதான். ஆனல் அவ்வாறு செயல் புரிந்த, கோமகன் ஸ்டீபன் காஸ்ட்ஸ்கிக்கோ இது சர்வ சாதார ணமான ஒரு தீர்மானமாகத் தோன்றியது.

அவன் ராணுவப் பயிற்சியில் அதிதீவிரம் காட்டி முன்னுக்கு வந்தவன். மன்னர்பிரானிடத்தும், தாய்நாட். டின்மீதும் அளவிலா பக்தி கொண்டிருந்தவன். அவன் தன் முன்னே ஏதோ ஒரு குறிக்கோள் இருப்பதாக எண்ணிக்கொள்வான். அது அல்பமானதாகவே. இருக்கட்டுமே. அதை அடைய அவன் முழுமூச்சுட னும் தீவிர வேகத்தோடும் முனைவான். அதை அடை வதற்காகவே வாழ்வான். வெற்றி பெறுவான். அதை அடைந்த உடனேயே, அது இருந்த இடத்தில் வேருெரு குறிக்கோள் தலையெடுக்கும், அதை அடைய அவன் பாடுபடுவான். இப்படி ஒன்றை அடுத்து, மற்ருென்ருகக் குறிக்கோள்களை வகுத்துக்கொண்டு, உயிரைக் கொடுத்து உழைத்து வெற்றிபெறுவதுதான் அவனுடைய வாழ்க்கை அம்சம். அதன் அடிப்படை