பக்கம்:முத்துக் குளிப்பு.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96

என்ன? தற்சிறப்பு மோகம்தான்: தனது பெருமையை உலகுக்கு உணர்த்து வதற்காகப் புகழ்பெறப் போராடு வது - புகழைச் சம்பாதிப்பது.

இந்த ஆசை தான் அவனை ராணுவத்திலும் உந்தி யது. ஏராளமான புத்தகங்களைப் படித்து அறிஞகுைம் படி தூண்டியது. உயர்குல மக்கள் கூட்டத்திலே ஒரு நட்சத்திரமாகப் பிரகாசிப்பதற்குரிய பண்புகளைக்கற் றுக் கொள்ளச் செய்தது.

அந்தக் காலத்தில் உயர்குலத்தார் சமூகம் நான்கு வகைகளாக விளங்கியது. பார்க்கப் போனல், எல்லாக் காலத்திலும் எங்கும் இதே தன்மைதான் என்கிருர் டால்ஸ்டாய் . பணபலம் பெற்றவர்கள்; ராஜசபையைச் சார்ந்தவர்கள். 2. செல்வம் இல்லாத போதிலும், பிறப் பினுலும் பயிற்சியிஞலும் ராஜசபையைச் சேர்கிறவர் கள். 3. பணம் பெற்று, அந்தத் தகுதியைக் கொண்டு ராஜசபையில் இடம் பெற முயல்கிறவர்கள். 4. பண பலமோ, ராஜசபை அந்தஸ்தோ பெற்றிராத போதிலும்; பணக்காரர்களோடும் ராஜசபையைச் சேர்ந்தவர்களோ டும் கூடிக்குலாவ மோகம் கொண்டு திரிபவர்கள்.

காஸ்ட்ஸ்கி இரண்டாவது பிரிவைச் சேர்ந்தவன். பின் இரு பிரிவினரும் அவனை நன்கு வரவேற்றினர். தன்னை கவனிக்காத உயர் சமூகத்து முதல் பிரிவில் எப்படியும் இடம்பெற்ருக வேண்டும் என்று திட்டமிட் டான் அவன் - அதற்குச் சுலபமானவழி முதல்பிரி வைச் சேர்ந்த மங்கை ஒருத்தியின் காதலனுக மாறு வதுதான். அவன் கருமமே கண்ணுக முனைந்தான். விரைவில் வெற்றியும் கண்டான்.

அவன் தேர்ந்தெடுத்த பெண் பேரழகி. பெரும் செல்வர்களாலும் வியந்து போற்றப்பட்ட கோமகள்.