பக்கம்:முத்துக் குளிப்பு.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

97

ஆரம்பத்தில் அவள் அவனை ஆதரிக்கவில்லை. அவள் மீது உண்மையான காதல் கொண்டான் அவன். நான டைவில் அவள் அவனிடம் பரிவு காட்டினள். அவள் தாய் அவனே மகிழ்வுடன் வரவேற்று, ஆதரவு நல்கி ள்ை. அவளே மணந்து கொள்ள அவன் விரும்பி ஞன். அவனது கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டது. இவ்வளவு எளிதில் இது நிறைவேறிவிட்டது அவ னுக்கே வியப்பளித்தது. தாய், மகள் இருவர் பண்பிலும் விசித்திரமான - வழக்கத்தை மீறிய-ஏதோ ஒன்று கலந்து கிடந்ததாக அவனுக்குத் தோன்றியது. அவன் ஆழ்ந்த காதலில் சிக்கியிருந்ததால், உண்மையை உணர இயலாக் குருடன் ஆகவும், ஊரில் ஒவ் வொருவரும் பேசிக்கொண்ட விஷயத்தைக் கேட்ட ஜியத் தெரியாத செவிடனுகவும் விளங்கினன். அவனே மணந்து கொள்ளச் சம்மதித்த உயர்குல அழகி ஒருவரு டக் காலமாக மன்னனின் ஆசை நாயகியாக உல்லாச வாழ்வு வாழ்ந்து வந்தாள்.

கல்யாணத்துக்கு இரண்டு வாரங்கள் இருந்த போது, இந்த உண்மையை அவன் அறிய நேர்ந்தது. புனிதத்தின் திருஉருவமே போலும், காதலின் களங்கமில் லாக் கற்கண்டுச் சிலே போலும் அவனேடு உரையாடி உவகை தந்த கட்டினம் பெண் மன்னர் பிரானின் காமக்களியாட்டத்துணைவியாகக் காலம் கழித்தவளாம்! இதை அவள் வாயினுலேயே கேட்டுத் தெரிந்து கொண்ட அவன் கொதிப்புற்ருன். கோபம் கொண் டான். அவளது முதற் காதலன் சாதாரண பிரஜை யாக இருந்தால் அவன் அப்போதே போய் அந்த நபரை தீர்த்துக் கட்டியிருப்பான். ஆளுல் அவனே மாண்பு மிக்க மன்னர் பிரான்! மன்னரிடம் அவனுக்குக் காதல் என்று சொல்ல வேண்டிய அளவுக்கு பக்தி உண்டு. என்ன செய்வான் பாவம்!

7