பக்கம்:முத்துக் குளிப்பு.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 0 |

அவள் பேச்சை அவர் நம்பவில்லை என்பதை அவரது முகம் காட்டியது. சரிசரி. இங்கு செளகரிய மாய் தங்கி ஓய்வு எடுத்துக்கொள்’ என்று கூறிவிட்டு அவர் தங்கிருந்த மற்ருெரு இருட்டறைக்குள் சென்று பிரார்த்தனையில் ஈடுபட்டார்.

நேரம் ஓடியது. அவளுக்கு அந்தச் சூழ்நிலை மிகவும் பிடித்திருந்தது. இங்கு வசித்த விசித்திரமான-கவர்ச்சி பொருந்திய-ஆணை வசியம் செய்து வெற்றி கொள்ள வேணும் என்ற ஆசை அவள் உள்ளத்தில் குறுகுறுத் தது. அவள் குழைவு மொழி பேசினுள். கிண்கிணிச் சிரிப்பு சிதறிள்ை. சாமியார் ஒரு சொல்கூட எதிரொலி தரவில்லை. ஆயினும் அவளுக்குத் தெரியும், அவளது குரலும் சிரிப்பொலியும் அவர் உள்ளத்திலே கிளுகிளுப்பு உண்டாக்குகிறது, உணர்வைக் கிளறிவிடுகிறது என்று. ஆகா, இவரல்லவா சரியான ஆண்பிள்ளை' என அவள் எண்ணிள்ை. அவரை நினைத்து மகிழ்வுற்று, அவரைத்தான் இருக்கு மிடத்துக்குக் கவர்ந்திழுக்க அவள் பெரிதும் முயற்சித்தாள்.

சாமியார் உட்புற அறையிலிருந்து அசையவே இல்லை. அவரை எப்படியும் வெற்றி பெறுவது என உறுதிபூண்ட ஒய்யாரி நாடகமாடத் தொடங்கிள்ை. தான் ஏதோ வியாதியில் சிக்கி அவதியுறுவதாகவும், தனது உயிர் போய்க்கொண்டிருப்பதாகவும் ஒலமிட்டு, ஈவு இரக்கமற்ற சாமியாரைக் குறைகூறிப் புலம்பினுள்.

செர்ஜியஸ் மன அமைதியோடு இருந்தாரில்லை. அவர் உள்ளத்தில் பெருங் குழப்பம். ஆபத்து-அழிவு -தன் தலைமீது விழக் காத்திருப்பதாக உணர்ந்தார் அவர். உம்மிடம் மனிதத் தன்மையே இல்லை’ என்று அவள் புலம்பியது அவர் மனசை அறுத்தது. அவளுக்கு உதவிசெய்ய வேண்டியதுதான்; அவள் இருக்கும்