பக்கம்:முத்துக் குளிப்பு.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 06

ஆ, சரிதான்! அதனால் பேராபத்து ஒன்றுமில்லை’ என்று குழறிய அவள் அவரை நன்ருக அணைத்தபடி படுக்கையில் அமர்ந்து, அவரையும் தனக்கருகே இழுத்துத் தள்ளினுள்.

ఛీ : ; } { 3 డ ఛి

விடியும் நேரத்தில் விழித்தெழுந்த அருள் தந்தை' மிகுந்த ஆத்ம வேதனைக்கு ஆளானர். இனி அங்கே வசிக்க முடியாது. அந்தப் பெண்ணின் தந்தை முகத் தில் எப்படி விழிப்பது? பழைய உடுப்பு ஒன்றை அணிந்துகொண்டு, யாருக்கும் தெரியாமல் வெளி யேறினுள்.

நடத்து கொண்டிருந்த சாமியாரின் உள்ளத்தில் பாஷென்கா எனும் பெண்மணியின் நினைவு ஏனே எழுந்தது. அவள் ஒரு அப்பாவி, ஸெர்ஜியஸ் சிறு பையனுக இருந்தபோது அவர்கள் வீட்டில் வேலை செய் தவன், பிறகு வாழ்க்கையில் பல துன்பங்களையும் அனுபவித்து எப்படியோ வாழ்கிறவள். அவளைக் கண்டு பேசினுல், தனது வாழ்க்கையில் உள்ள தவறு என்ன; தான் செய்த பாவம் என்ன; அதற்கு நிவர்த்தி என்ன என்பதெல்லாம் விளங்கும் என்று அவருடைய ‘அந்தராத்மா உபதேசிக்கிறது. ஆகவே, அவர் அவளிருந்த ஊருக்கு யாத்திரை போகிருர்.

குடும்ப வாழ்வில் உழலும் முதிய பெண்மணியைக் கண்டு அவளது அன்ருட அலுவல்களே அறிந்து கொண்டு, திரும்பவும் தனிவழியே நடக்கத் துணிந்த ஸெர்ஜியஸ் சிந்திக்கிருர் : பாஷென்கா வாழும் முறை தான் சரியானது. கடவுளுக்காக வாழ்கிறேன் என்று ஏமாற்றிக் கொண்டு நான் மனிதனுக்காகவே வாழ்ந் தேன். அவளோ மனிதருக்காக வாழ்வதாக எண்ணிய