பக்கம்:முத்துக் குளிப்பு.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

107

வாறே, கடவுளுக்காக வாழ்க்கை நடத்தியவள். பலனை எதிர்பாராமல் ஒரு கப் தண்ணிர் அளித்தாலும் போதும். மனிதர் பாராட்டிப் புகழ வேண்டும் என்று எதிர்பார்த்து நான் செய்த சேவைகள் அனைத்தினும் அது உயர்ந்தது. கடவுட் பணிபுரிவது என்பது நல்லதுதான். அதிலும் உண்மை உண்டு. ஆனால், மக்களின் போற்றுதலைப் பெறவேண்டும், மற்றவர்களே விட உயர்ந்தவனுக வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டால், எல்லாம் தொலைந்தது...”

இவ்வாறு எண்ணம் வளர்த்த ஸெர்ஜியஸ் ஆர் ஊராகத் திரிந்து, அன்போடு உதவி புரிந்து வாழ்வின் பல கஷ்டங்களையும் அனுபவிக்கிருர். இறு: "ஊர்சுற்றும் சோம்பேறி’ என்று தண்டிக்கப்பட்டு, சைபீரியாவுக்கு அனுப்பப்படுகிருர். அங்கு குடியான வன் ஒருவன் தோட்டத்தில் பயிர் செய்து, பிள்ளைக்குப் பாடம் கற்றுக் கொடுத்து, நோயாளிகளுக்குப் பணி விடை செய்து காலம் கழிப்பதில் ஈடுபடுகிருச். வேடிக்கை யான மனிதன் ஒருவனின் விந்தைக் கதை இப்படி முடி கிறது.