பக்கம்:முத்துக் குளிப்பு.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o

கையில் காணப்படும் உயர்வு தாழ்வுகள், அவற்றின் காரணங்கள் குறித்தும் மாக்ஸிம் பேசுகிருன், 'நீ வஞ்சிக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்தவன். உனது இன்றைய நிலைக்கு உன்னை நீயே குறைகூற வேண்டிய தில்லை’ என்ருன்.

ஆணுல், அந்த நாடோடி இதை ஏற்றுக்கொள்ள வில்லை. தனது சிறுமைக்கும் சீரழிவுக்கும் தானே பொறுப்பாளி என வாதாடுகிருன், நான் ஒரு ஸ்பெஷல் கேஸ் என்று கூறி விளக்க முயல்கிருன். இ த ர நாடோடிகளின் போக்கிலும் குணத்திலுமிருந்து இவ் வகையிலும், அவ ன் மாறுபட்டவனே என்கிருச் கதாசிரியர்.

விடுதலை பெற்ற விபசாரி அவனைத் தேடி வருகி ருள். அவைேடு வாழ்வேன் என்கிருள். அவன் அவளே அனுப்பிவிட முயல்கிருன். அவள் குடித்து விட்டு கலாட்டா செய்கிருள். போலீசாரால் பிடித்துச் செல்லப்படுகிருள். அவளது போக்கையும் சீரழிவை யும் கண்டு கனுேவலோவ் மிகுந்த வேதனை அடை கிருன். நல்லது எண்ணிச் செய்த காரியம் அவளால் மதிக்கப்படவில்லேயே என வருந்துகிருன். அவனுள் வெறுப்பும் வேதனையும் வளர்கின்றன. மறுபடியும் குடிவெறி அவனைப் பற்றுகிறது. குடியணுகி, சோகப் பாடல்களை உணர்ச்சிகரமாகப் பாடிக்கொண்டு மதுச் சாவடியில் பொழுதுபோக்குகிருன்.

பல வருஷங்களுக்குப் பிறகு மாக்ஸிம் அவனை வேறு ஒரு இடத்தில் - கடற்கரை அருகில் - கடின உழைப்பில் ஈடுபட்ட தொழிலாளியாகக் காண நேரு கிறது. இருவரும் நட்பை மறக்காமல் பேசிப் பழகு கிருர்கள். கனேவலோவின் புறத் தோற்றத்தில் பெரும் மாறுதல்கள் ஏற்பட்டிருந்த போதிலும், அவன் உள்ளம்

8