பக்கம்:முத்துக் குளிப்பு.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7

இருக்கிறது. சட்டங்களைத் தகர்த்து, அநியாயங்களே வளர்த்து அதர்ம அட்டூழியங்களைச் செய்யத் தூண்டுகிற பண்பும் உறைகிறது. சந்தர்ப்பம், சூழ்நிலை, பண்பாடு முதலிய புறக்காரணங்களுக்குத் தகுந்தபடி மனிதன் நல்லவனுகவோ, அல்லது தீயவனுகவோ செயல் புரிகிருன்.

நற்பண்பை தேவன் என்றும், தீய தன்மையை அசுரன் என்றும் உருவகப் படுத்தினுல், ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் தேவனும் வாழ்கிருன், அசுரனும் வசிக்கிருன் என்று கொள்ளலாம். ஆகவே, ஒவ்வொரு மனிதனுள்ளும் ஏற்படுகிற தர்ம-அதர்ம மனக் குழப் பங்களை-மனச்சாட்சிப் போராட்டங்களை தேவ அசுத யுத்தம் என்று குறிப்பிடலாம். தேவாசுர யுத்தம் புராண காலத்தில் நடந்து முடித்து விடவில்லை; இன்றும் ஒவ்வொரு மனிதனுள்ளும் ந - ந் து கொண்டுதான் இருக்கிறது-இவ்வாறு அழகாக விளக்கி யிருக்கிருர் கு. ப. ராஜகோபாலன், டாக்டர் ஜெகில் அன்ட் மிஸ்டர் ஹைட் புத்தகத்தை இரட்டை மனிதன்” என்ற பெயரில் தமிழாக்கி வெளியிட்டபோது, அதன் முன்னுரையிலே. -

நல்ல மனிதனுக வாழும் டாக்டர் ஜெகில், மிஸ்டர் ஹைட் ஆக மாறுகிறபோது கொடிய செயல்களே எல்லாம் செய்கிருன், முடிவில் இதர மனிதர்களால் வேட்டையாடப்பட்டுச் சாகிருன், இந்த அனுபவத்தை, நன்ருகக் கதை சொல்லத் தெரிந்த ஸ்டீவன்ஸன் அழகாக எழுதியிருக்கிருர்.