பக்கம்:முத்துக் குளிப்பு.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 17

மந்தபுத்தியால் பூனே செத்தது. அல்லது, எலிகளை அதிகம் தின்றதால் இருக்கலாம்?-அனுபவம் மிகுந்த் தாத்தா ஒருவரின் கூற்று இது.

அவரே சொல்லி யிருக்கிருர் : உண்மையில் இது வேடிக்கையானதுதான். ஒருவன் விழித்த கண் களுடன் வாழலாம். ஆயினும், முக்கிய விஷயம் எதையுமே கவனிப்பதில்லை. வாழ்க்கை எனும் முட்டான் தனமான விவகாரத்தில் பெரும்பாலர், கூரிய நோக்கும் அடர்ந்த வாலும் உடையவர்களாக இடறி விழுகிருச் கள். ஆளுல் காலக் கிழவன் தன் வீச்சரிவானால் கொய்யும் வேளை வந்ததும் அவர்கள் அதிகமாக எதை யும் பார்த்திருக்க மாட்டார்கள். அனைத்தையும் பதிவு செய்துகொண்டு பின் மறந்துவிடும் காமிரா போலில்லா மல், பலவற்றையும் பார்த்தறிவதற்கு பழகிக்கொள்ள வேண்டும்.’’

“தாத்தாவும் பேரனும்’ என்ற புதிய புத்தகத்தில் வருகிறது. இது. ராபர்ட் ரூவார்க் என்பவர் எழுதியுள்ள இந்தப் புத்தகம் தனி ரகமானது, இயற்கை, பறவை கள், மீன்கள், மனிதர்களை எல்லாம் பற்றித் தமது பேரனுக்குக் கற்றுக்கொடுக்கிருர் தாத்தா, சிறுவனின் அனுபவங்கள் ரசமானவை.

米 岑

ரசமான விஷயங்கள், சுவையில்லாத விஷயங்கள், வறண்டவை, குளுமையானவை போன்ற எந்த ரகமான விஷயங்கள் கொண்ட புத்தகங்களாக இருந்தாலும், நான் பொறுமையோடு படிப்பது வழக்கம். புத்தகம்’ என்று எழுதி, அச்சிட்டு, அழகு படுத்திப் பலருடைய உழைப்பிலுைம் உருவாகியுள்ள ஒன்றைப் படித்துப்