பக்கம்:முத்துக் குளிப்பு.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோக நாடகங்கள்

சாதாரண மக்கள், ஏழை எளியவர்கள், உழைத்துப் பிழைப்பவர்களின் அன்ருட வாழ்க்கையில் என்ன அற்புதம், அதிசயம், பிரமாதம் நிகழ்ந்துவிடப் போகிறது என்று பலரும் எண்ணுவது இயல்பு. அவர் கஜம் உன்னமும் உணர்வும் பெற்ற மனிதர்களே என்ற உணர்வோடும் மனித இதயத்தோடும் மற்றவர் கனது வாழ்வின் நிகழ்ச்சிகளைக் கவனித்தால், சாதாரண கக்களிடையிலும் எத்தகைய மகத்தான உணர்ச்சி நாடகங்கள், சோகக்கதைகள் ஊற்றெடுத்துக் குமிழி விட்டு ஒடுங்கிவிடுகின்றன என அறியமுடியும். சகல மனிதர்களின் உள்ளத் துடிப்புகளையும் உண்ர்ச்சிப் போராட்டங்களையும் கூரிய நோக்கோடும் நுண்உணர் கோடும் புரிந்து கொள்ளும் ஆற்றல் பெற்ற கதாசிரி யர்கள் மறக்கமுடியாத அற்புதமான கதைகளைப் படைத் ஜர்கள். சாதாரண மனிதரின் மகத் தா ன உணர்ச்சிகளைப் பற்றிய சொற்சித்திரங்கள் ரசிகர்களின் உள்ளத்தைத் தொடும் தன்மை பெற்றவை.

காதரின் மேன்ஸ்பீல்ட் எனும் அம்மையார் எழுதி புள்ள பார்க்கர் அம்மாவின் வாழ்க்கை’ என்கிற சிறு கதை இந்த இனத்தைச் சேர்ந்தது.

பார்க்கர் அம்மா (மா பார்க்கர்) வயதான பாட்டி. கனவான் ஒருவரின் ஜாகையை வாரத்துக்கு ஒருநாள் சுத்தம் செய்யும் பொறுப்பு அவளுக்கு. சோம்பேறியும் சுகவாசியுமான அந்தக் கனவான் ஆறு நாட்களில் தனது அறையை அசல் குப்பைத் தொட்டியாக மாற்றி வைப்பார். ஏழாம்நாள் வேலைக்கு வருகிற பாட்டிக்கு இடுப்பொடியும்படியான வேலைகள் சுமந்து கிடக்கும்.