பக்கம்:முத்துக் குளிப்பு.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9

அன்றும் அவள் வழக்கம்போல் வேலை செய்ய வந்தாள். உன் பேரன் எப்படி இருக்கிருன் என்று கனவான் உபசார்த்துக்காக விசாரித்தர்ர். அவன் நேற்றுப் புதைத்து விட்டோம் என்ருள் கிழவி.

பேரனைப் பறி கொடுத்துவிட்ட பாட்டிக்கு எவ்வாறு ஆறுதல் கூறுவது என்று புரியாது குழம்புகிருர் பெரிய வர். அவள் பெருமூச்சுடன் வேலையில் ஈடுபடுகிருள். பேரனின் சிறு குறும்புகள் அவள் நினைவில் எழுந்து

கிளர்வூட்டுகின்றன்.

அடுப்புத் தீயும் அடுப்பங்கரை அலுவல்களும் அவளது மனஓட்டத்துக்குத் தடை விதிக்கின்றன். பல் ரகமான வேலைகளும் கவனத்தைக் கவர்கின்றன். சிரமமான வாழ்க்கைதான் ரீமதி பார்க்கருடையது !

பதிருைவது வயசில் சொந்த ஊரை விட்டு மாபெரும் நகருக்கு வந்தாள். ஒரு வீட்டில் சிற்ருள் வேலே கிடைத்தது. பயங்கரமான இடம் அது. தலை மைச் சமையல்காரி கொடியவள். அங்கு கஷ்டப்பட்ட பார்க்கர் அம்மா ஒருவனேக் கல்யாணம் செய்து கொண் டாள். அதிலும் சுகப்படவில்லை. பதின்மூன்று குழந்தை கள் பிறந்தன. அவற்றில் ஏழு செத்தன. வீடு, இல் லாவிட்டால் ஆஸ்பத்திரி-புருஷனுக்குப் பணிபுரிதல், பிள்ளைகளுக்குப் பாடு பார்த்தல் என்று எப்பவும் வேலை தான். உதவி புரியவரும் உறவினரும் பாரமே ஆயினர். பிறகு இந்தப் பேரன்...

சதா நோஞ்ச உடம்புதான். எவ்வளவோ மருந்து கள் கொடுத்தும் அவன் தடிக்கவே இல்லை. முடிவில் செத்துப்போஞன். அவனது சீக்குக்கும், சிரமங்களுக் கும் பாட்டிதான் காரணம் என்று குறை கூறுவதுபோல் அவளேப்பார்த்துக் கொண்டே செத்து வைத்தான்.